Advertisment

இரட்டை ஆண் குழந்தை; வாழ்த்து மழையில் நமீதா

Namitha has birth twins boys

கடந்த 2004ஆம் ஆண்டு விஜயகாந்த் நடிப்பில் வெளியான எங்கள் அண்ணா படத்தின் மூலம் நமீதாதமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். முதல் படத்திலேயே தனது வசீகர நடிப்பின் மூலம் ரசிகர்களின் கவனத்தை பெற்றார். அதன்பிறகு சத்யராஜ், பிரசாந்த்,அஜித், விஜய் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்துள்ளார். ரசிகர்களின்கனவு கன்னியாகஇருந்த நமீதா ஒரு காலகட்டத்தில் உடல் எடை கூடி ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப் போனார். இதன் பிறகு பட வாய்ப்புகளும் பெருசாஅவருக்கு அமையவில்லை. மன அழுத்தம்காரணமாகவேதனது உடல் எடை கூடியதாக நமீதாவே தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கூறியிருந்தார்.

Advertisment

இதையடுத்து கடந்த 2017 ஆம் ஆண்டு வீரேந்திர சவுத்ரிஎன்பவரைநடிகை நமீதா காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் இவர்கள்இருவருக்கும் இரட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த அறிவிப்பை தனது கணவருடன் இணைந்து வீடியோவாகவெளியிட்டுள்ளார். அதில் இந்த கிருஷ்ணா ஜெயந்தி நன்னாளில் எங்களுக்கு குழந்தை பிறந்ததை உங்களிடம் தெரிவித்து கொள்வதில்மகிழ்ச்சி அடைகிறோம். உங்களதுஅன்பும், வாழ்த்தும் எப்போதும் போல எங்களுக்கு கிடைக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்” எனக் கூறியுள்ளார். இதனைதொடர்ந்து ரசிகர்கள் பலரும்வீரேந்திர சவுத்ரி - நமீதா தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

tamil cinema actress namitha
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe