Advertisment

கிணற்றில் விழுந்த நமீதா... படக்குழு கொடுத்த விளக்கம்!

namitha

ஆர்.எல்.ரவி மற்றும் மேத்யூ ஸ்கேரியா இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'பெளவ் வெளவ்'. இப்படத்தை நடிகை நமீதா தயாரிக்கிறார். மேலும், இப்படத்தில் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பானது திருவனந்தபுரம் அருகே உள்ள ஒரு வனப்பகுதியில் நடைபெற்று வருகிறது.

Advertisment

இந்நிலையில், நடிகை நமீதா கிணற்றுக்குள் தவறி விழும் வகையிலான காட்சிகள் படமாக்கப்பட்டது. படப்பிடிப்பைத் தூரத்தில் இருந்து வேடிக்கை பார்த்த அந்தப் பகுதி மக்கள், நடிகை நமீதா கிணற்றுக்குள் தவறி விழுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனையடுத்து, படப்பிடிப்புத் தளத்தில் மக்கள் அதிகளவு திரண்டனர். 'இது படம் தொடர்பான காட்சி' எனப் படக்குழுவினர் விளக்கம் கொடுத்த பின்னரே மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisment

actress namitha
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe