/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/508_4.jpg)
கடந்த 2004ஆம் ஆண்டு விஜயகாந்த் நடிப்பில் வெளியான எங்கள் அண்ணா படத்தின் மூலம் நமீதாதமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். முதல் படத்திலேயே தனது வசீகர நடிப்பின் மூலம் ரசிகர்களின் கவனத்தை பெற்றார். அதன்பிறகு சத்யராஜ், பிரசாந்த்,அஜித், விஜய் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்துள்ளார். ரசிகர்களின்கனவு கன்னியாகஇருந்த நமீதா ஒரு காலகட்டத்தில் உடல் எடை கூடி ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப் போனார். இதன் பிறகு பட வாய்ப்புகளும் பெருசாஅவருக்கு அமையவில்லை. மனஅழுத்தம்காரணமாகவேதனது உடல் எடை கூடியதாக நமீதாவே தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கூறியிருந்தார்.
இதையடுத்து கடந்த 2017 ஆம் ஆண்டு வீரேந்திர சவுத்ரிஎன்பவரைநடிகை நமீதா காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில்பங்கு பெற்றுவந்த நமீதா தற்போது கர்ப்பமாகஉள்ளார்.இதுகுறித்த அறிவிப்பைதனதுபிறந்தநாளான இன்று புகைப்படத்துடன் வெளியிட்டுள்ள நமீதா, "வாழ்வின்புதிய அத்தியாயம் தொடங்கியதும், நான் மாறுகிறேன்,மிகவும் மென்மையாக என்னுள் ஏதோ மாறுகிறது. பிரகாசமான மஞ்சள் சூரியன் என் மீது பிரகாசிக்கும்போது, புதிய வாழ்க்கை, புதிய உயிர் என்னை அழைத்தது. நான் விரும்பியதெல்லாம் நீ தான், உனக்காக இவ்வளவு நாள் பிரார்த்தித்தேன் . உன் மென்மையான உதைகள் மற்றும் உன் படபடப்புகள், அனைத்தையும் என்னால் உணர முடிகிறது. நான் இதுவரை இல்லாத ஒன்றாக என்னை நீ உருவாக்குகிறாய்” எனக் குறிப்பிட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து ரசிகர்கள் திரைபிரபலங்கள்என பலரும் வாழ்த்துகளைதெரிவித்து வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)