Published on 02/01/2019 | Edited on 02/01/2019

வீரேந்திர சௌதரி என்ற தொழிலதிபரை காதல் திருமணம் செய்த பின்னர் நடிகை நமீத நடிக்கும் படம் ‘அகம்பாவம்’. இப்படத்தில் சாதி வெறியையும், அதனால் ஏற்படுகிற விளைவுகள் பற்றியும் பேசப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
மேலும் இந்த படத்தில் துணிச்சல் மிகுந்த பத்திரிகை நிருபராக நமீதா நடிப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.
அவருடன் அப்புக்குட்டி, மனோபாலா, மாரிமுத்து ஆகியோரும் நடிக்கிறார்கள். படத்தின் தயாரிப்பாளர் வாராஹி வில்லனாக நடிக்கிறார். இப்படத்தில் அருணகிரி இசையமைக்க, மகேஷ் இயக்குகிறார். இவர், சரத்குமார் நடித்த ‘சத்ரபதி’ படத்தை இயக்கியவர். இப்படத்தின் 50% ஷூட்டிங் முடிந்துவிட்டதாம்.