Advertisment

“சுனாமி அலைபோல் உறுப்பினர்கள் இணைகிறார்கள்” - நமீதா

namitha about bjp

‘எங்கள் அண்ணா’ படம் மூலம் தமிழில் அறிமுகமான நமீதா, தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்தார். சின்னத்திரையுலும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். பின்பு நடிப்பிலிருந்து விலகியிருந்தார். இடையே அரசியலில் ஆர்வம் காட்டி பா.ஜ.க. சார்பில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

Advertisment

இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் நடந்த நிகழ்சியில் நமீதா கலந்து கொண்டார். அதில் மக்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ந்தார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

Advertisment

அவர் பேசுகையில், “அமித்ஷாவுடைய பிறந்தநாளை கொண்டாடிட்டு இருக்கோம். உலகத்திலேயே அதிக தொண்டர்களை கொண்ட பெரிய அரசியல் கட்சி பாரதிய ஜனதா கட்சிதான். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மணி நேரமும் பெரிதாகிக் கொண்டே போகிறது. அது போலத்தான் இன்னைக்கும் நிறைய பேர் பா.ஜ.க.வில் இணைந்திருக்கிறார்கள். இது தமிழ்நாட்டில் மட்டும் கிடையாது. இந்தியா முழுவதும் நடந்து கொண்டு வருகிறது. சுனாமி அலைபோல் அது இருக்கிறது” என்றார்.

actress namitha
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe