nambiar family case update

Advertisment

மறைந்த நடிகர் நம்பியார், 1946ம் ஆண்டு ருக்மணி என்பவரைதிருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு சினேகலதா என்ற ஒரு மகளும் சுகுமாரன் மற்றும் மோகன் என இரண்டு மகன்களும் உள்ளனர். இதில் மகன் சுகுமாரன் 2012ம் ஆண்டு மாரடைப்பு காரணமாக காலமானார். நம்பியாரின் சொத்துக்கள் பாகம் பிரிக்கப்பட்ட பிறகு மகன் சுகுமாரன் காலமானதால்சுகுமாரின் மகனும்நம்பியாரின் பேரனுமான சித்தார்த் சுகுமார்தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் சொத்து உரிமையியல் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில், "தனது தாத்தா நம்பியாரின் புகைப்படங்கள், விருதுகள் மற்றும் கோப்பைகள், சபரிமலைஐயப்பனின் ஓவியங்கள், பூஜை பொருட்கள் உள்பட அவர் பயன்படுத்திய பொருட்கள் எனது அத்தை சினேகலதாவிடம் உள்ளது. ஒரே குடும்பமாக இருந்தபோதுஅந்த பொருட்களை அனைவரும் வைத்திருந்தோம். அந்த பொருட்களை எனக்கு தருவதாக ஒப்புக்கொண்ட எனது அத்தை சினேகலதா, அவர் தனியாக வீடு வாங்கி குடியேறிய பிறகுதற்போது தர மறுக்கிறார். எனவே அந்த பொருட்களை என்னிடம் வழங்க உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டு சினேகலதாவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார்.

இது குறித்து ஆய்வு செய்ய வழக்கறிஞர் மற்றும்ஆணையர் ஒருவரை நியமிப்பதாக உயர்நீதிமன்றம்இடைக்கால உத்தரவு ஒன்றைபிறப்பித்துள்ளது. தனி நீதிபதியின் இந்த இடைக்கால உத்தரவை ஏற்க முடியாது என உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார் நம்பியாரின் மகள் சினேகலதா. தந்தை பயன்படுத்திய பொருட்கள் தனக்கு தான் சொந்தம் என்றும் இந்த வழக்கில் தெரிவித்துள்ளார். இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகளின் குழு இந்த ஆய்வு அறிக்கையை அளிக்க வழக்கறிஞர் மற்றும்ஆணையரை நியமிக்கும் உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும் புதிய ஆணையர் ஒருவரை நியமித்து அவர்கள் நம்பியாரின் வீட்டில் ஆய்வை மேற்கொள்வார்கள் என்றும் தெரிவித்துள்ளது.

Advertisment

இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது என்று கூறியுள்ளது. மேலும் புதிய வழக்கறிஞர், ஆணையரை நியமித்து நம்பியாரின் வீட்டில் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளது.