/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/411_19.jpg)
இஸ்ரோவில்பணியாற்றிய வான்வெளி ஆராய்ச்சியாளர் நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து 'ராக்கெட்ரி- நம்பி விளைவு' என்ற படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் மூலம் நடிகர் மாதவன் இயக்குநராக அறிமுகமாகிறார். மிகப்பெரிய விஞ்ஞானியாக அறியப்பட்டு பின் உளவாளி என முத்திரை குத்தப்பட்டு, அதன்மூலம் பல நெருக்கடிகளைச் சந்தித்தவர் நம்பி நாராயணன். பின்னாட்களில் அவர் நேர்மையானவர் என நிரூபிக்கப்பட்ட போதிலும் அவர் எதிர்கொண்ட இன்னல்களும் துயரங்களும் சொல்லி மாளாதவை. அவரது வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளஇப்படத்தின் ட்ரைலர்ஏற்கனவே வெளியாகி பலரின் கவனத்தை பெற்றது.
இந்நிலையில் துபாயில் நடைபெற்று வரும் துபாய் எக்ஸோ 2022 ல்'ராக்கெட்ரி- நம்பி விளைவு'படத்தின் ட்ரைலர்ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதனை பார்த்த பாரவையாளர்கள்எழுந்து நின்று கைதட்டி பாராட்டு தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வில் உரையாடும்போதுராக்கெட் விஞ்ஞானி நம்பி நாராயணனிடம், நடிகர் மாதவனிடம் இப்படத்தின் கதையைச் சொல்ல வேண்டும் என்றபோது உங்கள் கருத்து எவ்வாறு இருந்தது என்பது குறித்து கேட்கப்பட்டதற்கு, அவர் கூறியதாவது.., “பொறியியல் துறை சார் அறிவின் சாராம்சத்தை புரிந்துகொள்ளக்கூடிய ஒருவரால் என் கதை சொல்லப்பட வேண்டும் என நான் விரும்பினேன். அந்தவகையில், மாதவன் ஒரு பொறியாளர் என்பதால், என் கதையை அவரிடம் சொல்வது எனக்கு மிக எளிதாக இருந்தது. என் வாழ்வின் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் APJ அப்துல் கலாமின் உயிரைக் காப்பாற்ற நான் எடுத்த முயற்சிகளை அந்த சம்பவத்தை நான் விளக்கத் தொடங்கிய நேரத்தில், மாதவன் நான் உச்சரித்த வார்த்தையில் ‘வளிமண்டல அழுத்தத்தில் சமநிலையின்மை’ என்ற பதத்தை உடனடியாக புரிந்துகொண்டார். அவரது இயல்பிலேயே பொறியியல் பற்றி நிறைய அறிந்திருந்தார். அதனால் எனக்கு மாதவன்தான் பொருத்தமாக இருந்தார்.
மேலும் ராக்கெட் விஞ்ஞானி, உண்மையின் பாதையில் செல்ல வேண்டும் ஒருவரால் உங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டால், நீங்கள் சோர்ந்து போய் விடக்கூடாது, நீதி கிடைக்கும் வரை போராட வேண்டும். என்ற செய்தியை இளைஞர்களுக்குத் தெரிவித்ததைக் கேட்டு, அங்கு குழுமியிருந்த மொத்த கூட்டமும் உற்சாகமடைந்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)