/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/298_1.jpg)
இஸ்ரோவில் பணியாற்றிய வான்வெளி ஆராய்ச்சியாளர் நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து 'ராக்கெட்ரி - நம்பி விளைவு' என்ற படத்தை நடிகர் மாதவன் இயக்கியுள்ளார். இப்படத்தை இயக்கியது மட்டுமின்றி நம்பி நாராயணனின் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது வருகிறது. மேலும் ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் படத்தை பார்த்து தங்களது கருத்துகளை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
அந்த வகையில் தமிழ்நாட்டை சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை 'ராக்கெட்ரி - நம்பி விளைவு' படத்தை பார்த்து தனது கருத்தை பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக மயில்சாமி அண்ணாதுரை தனது சமூக வலைதளபக்கத்தில், "ராக்கெட்ரி நம்பி விளைவு: எங்களை சிறிது நேரம் வாயடைக்க செய்தது. இஸ்ரோவில் மீண்டும் வாழ்ந்தது போல் உணர்ந்தேன். இது வெறும் திரைப்படம் அல்ல, ஒரு வரலாற்று சாதனை, திரையில் ஒரு காவியம்" என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "இவர் பாதிக்கப்பட்டதுபோல இன்னொரு நம்பி மீண்டும் எதிர்காலத்தில் இருக்கக்கூடாது என்ற நம்பி நாராயணன் அவர்களின் நோக்கத்தையும் செயல்பாட்டையும் இந்தப் படத்தின் மூலம் பெரும் திரளான மக்கள் அறிந்துகொண்டிருக்கின்றனர். திரு. நம்பி நாராயணன் அவர்களுக்கும் இந்தியத் திரையுலகில் இந்த மகத்தான பணியை செய்தமைக்காக திரு.மாதவன் அவர்களுக்கும் நான் தலை வணங்குகிறேன். கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்." என படக்குழுவினரை பாராட்டியுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)