‘ஒரு அடார் லவ்’ படத்தை இயக்கிய இயக்குநர் ஓமர் லுலு, ‘நல்ல சமயம்’ என்ற தலைப்பில் ஒரு படம் எடுத்துள்ளார். மலையாளத்தில் உருவான இப்படத்தில்இர்ஷாத் அலி, விஜீஸ்உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் ‘ஏ’ சான்றிதழுடன் நேற்று(30.12.2022)திரையரங்குகளில் வெளியானது.
இப்படத்தில் போதைப்பொருள் காட்சிகள், அதனைஊக்குவிக்கும்வகையில் அமைந்துள்ளதாகவும், தடை செய்யப்பட்ட போதைப்பொருளைப் பயன்படுத்தியதாகவும் இயக்குநர் ஓமர் லுலு மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், இயக்குநர் ஓமர் லுலு மற்றும் தயாரிப்பாளருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இது குறித்துஇயக்குநர்ஓமர் லுலு, "தொடர்ந்து என்னுடைய படங்கள் ஏன்டார்கெட் செய்யப்படுகின்றனஎனத்தெரியவில்லை. தடை செய்யப்பட்ட அந்தப் போதைப்பொருளை நாங்கள்முதலில் பயன்படுத்தவில்லை. இதற்குமுன்னால் பீஷ்ம பர்வம், லூசிபர், இடுக்கி, கோல்ட் உள்ளிட்ட படங்களில்போதைப்பொருட்கள் சம்மந்தப்பட்டகாட்சிகள் இடம்பெற்றுள்ளன.அப்படிஇருக்கையில், என் படத்தின் மீது மட்டும் வழக்குப்பதிவு செய்வது எனக்கு ஒன்றும் புரியவில்லை. நாங்கள்போதைப்பொருளை ஊக்குவிக்கும் வகையில் இப்படத்தை எடுக்கவில்லை. எதார்த்தத்தைப் பிரதிபலிக்கும் விதமாக மட்டுமேஅந்தக் காட்சிகள் வைக்கப்பட்டன. தங்களுக்கு எந்த விதமான நோட்டீசும் காவல்துறையிடம் இருந்து வரவில்லை" எனக் கோபமாகக் கூறியுள்ளார்.