Advertisment

“இளம் தலைமுறையினர் அவலத்தை பேசியிருக்கிறோம்” - இயக்குநர் பிரசாத் ராமர்

Nalla Perai Vaanga Vendum Pillaigale movie press meet

Advertisment

ப்ரீத்தி கரண், செந்தூர் பாண்டியன், சுரேஷ் மதியழகன், பூர்ணிமா ரவி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே’. பிரசாத் ராமர் இயக்கியுள்ள இப்படத்தில் பிரபல பாடகர் பிரதீப் குமார் இசையமைத்து தயாரித்துள்ளார்.

இப்படம் குறித்து இயக்குநர் பிரசாத் ராமர் கூறுகையில், “இப்படம் ஒரு வளர்ந்து வரும் குழந்தைகளை பற்றிய படம். படத்தில் ஒரு ட்ராவலும் இருக்கும். ரெண்டு பசங்க மதுரையிலிருந்து கிளம்பி ஒரு பொண்ண பார்ப்பதற்காக மாயவரம் போவாங்க. அந்த பசங்களின் நோக்கம் நடக்குதா இல்லையாஎன்பது தான் கதை. 2019ல் ஆரம்பிக்கப்பட்ட படம் இது. வேகமாக மாறிவரும் சமுதாயத்தில் இளம் தலைமுறையினர் படும் அவலத்தையும், அவர்கள் மீதான அணுகுமுறையையும் இந்த படம் பேசுகிறது. மதுரை மற்றும் மாயவரம் ஆகிய இடங்களில் 42 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினோம். போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளது. அடுத்த மாதம் வெளியிட திட்டமிட்டிருக்கிறோம்” என்றார்.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe