Nalinikanth talk about rajinikanth

தமிழ் சினிமாவில் 80, 90 களில் குணச்சித்திரம், வில்லன் கதாபாத்திரம் எனபல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர்நளினிகாந்த். தற்போது வரை சில படங்களிலும், தொடர்களிலும் நடித்து வரும் நளினிகாந்தைநக்கீரன் ஸ்டூடியோ சார்பில் சந்தித்தோம். அந்த சந்திப்பில் அவர் ரஜினிகாந்த் குறித்து பகிர்ந்து கொண்டவை...

Advertisment

“எல்லாரும் என்னைய பார்த்து நீங்க ரஜினிமாதிரியேஇருக்கீங்களேன்னுசொல்லுவாங்க. அதுஒன்னும் தப்பு இல்ல. அது என்னவென்றேதெரியல போன ஜென்மத்தில் ரெண்டுபேரும் அண்ணன், தம்பியாககூட இருந்திருக்கலாம். அதனாலரெண்டு பேரும் இந்த ஜென்மத்துல ஒரே தொழிலுக்கு வந்திருக்கலாம். ஆரம்ப காலகட்டத்தில் நானும், ரஜினியும்தான் ஒன்னா சினிமாவில் வாய்ப்பு தேடிக்கிட்டு இருந்தோம். அவருடைய லக் எல்லாமேநல்லதா அமைந்தது. அதேசமயம் எனக்கு வில்லன் கதாபாத்திரங்கள்அமைந்தது. ரஜினி நடித்த எல்லா தயாரிப்பு நிறுவன படங்களிலும் நானும் வில்லனாக நடித்திருக்கிறேன். ஒன்னாதானபட வாய்ப்பு தேடிட்டு இருந்தோம், ஆனால் நாம இப்படி இருக்கோம்ரஜினி மட்டும் பெரிய ஆளாகிவிட்டரேன்னுநினைக்கவில்லை. எல்லாம் அவரவர் விதி, யாருக்கு என்னென்ன அமையுமோ, அதுதான்அமையும். இப்ப வரைக்கும்ரஜினி மாறவேயில்லை. அப்போபேசுனமாதிரிதான் இப்போவும் பேசுவார்” என்றார்.

Advertisment