Advertisment

நண்பரால் கொடூரமாக தாக்கப்பட்ட பிரபல நடிகை... அழுதடித்து காவல் நிலையத்திற்கு ஓட்டம்...

ஹிந்தி சின்னத்திரையில் நாம்கரன் என்ற சீரியலில் நடித்து பிரபலமடைந்தவர் நளினி நெகி. அண்மையில் தன்னுடன் வசித்து வந்த ப்ரீத்தி என்ற நபர் தன்னை தாக்கிவிட்டதாக போலீஸில் நளினி புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

nalini negi

நளினியின் நண்பர் ப்ரீத்தி, கண்ணாடி தம்ளரால் முகத்தில் அடித்து காயப்படுத்தி உள்ளார். இதன் பின் அழுது அடித்துகொண்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு விரைந்துள்ளார். இது இந்தி பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த தாக்குதல் குறித்து நளினி நேகி ஓஷிவாரா போலீஸ் நிலையத்தில் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பது.

“நானும் பிரீத்தி என்ற பெண்ணும் சில வருடங்களுக்கு முன்பு அடுக்குமாடி குடியிருப்பில் ஒரே வீட்டில் தங்கி இருந்தோம். சில நாட்களுக்கு பிறகு அங்கிருந்து வெளியேறி தனியாக வீடு பார்த்து தங்கினேன். பிரீத்தி சமீபத்தில் வீடு வாடகைக்கு பார்க்கிறேன். அதுவரை உன்னுடன் தங்கிக்கொள்கிறேன் என்றார். நான் தங்கி இருந்த வீடு 2 படுக்கை அறை கொண்டது என்பதால் சம்மதித்தேன்.

Advertisment

alt="அட்" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="5d1b6208-de2c-4a28-a3ff-c9811774d370" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/336x150%20sixer%20ad_26.jpg" />

சில நாட்கள் கழித்து பிரீத்தியின் அம்மாவும் அதே வீட்டில் வந்து தங்கினார். இதனால் ஊரில் இருந்து எனது பெற்றோர்கள் வருகிறார்கள். எனவே வேறு வீட்டுக்கு செல்லுங்கள் என்றேன். திடீரென்று பிரீத்தியும், அவரது அம்மாவும் என்னை மோசமான வார்த்தைகளால் திட்டி சண்டைக்கு வந்தனர்.

பிரீத்தி அம்மா கண்ணாடி தம்ளரால் என் முகத்தில் அடித்தார். இருவரும் என்னை குரூரமாக தாக்கினர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.” இவ்வாறு மனுவில் கூறியுள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிறார்கள்.

Actress Bollywood
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe