style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="6542160493" data-ad-format="link" data-full-width-responsive="true">
'காதலில் விழுந்தேன்' வெளியாகி சுமார் 10 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் வெற்றி ஜோடிகளான நகுல் மற்றும் சுனைனா இணைந்து 'எரியும் கண்ணாடி' என்ற படத்தில் மீண்டும் இணைந்து நடிக்கின்றனர். மனிஷா கொய்ராலா, சுரேஷ் மேனன், அபர்ணா கோபிநாத், ரேவதி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தை சச்சின் தேவ் இயக்குகிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு கவிப்பேரரசு வைரமுத்து பாடலாசிரியராக பணியாற்றுகிறார்.