ADVERTISEMENT

'நல்ல படம்னு எடுத்து...வன்முறையை தூண்டுறாங்க' - கவனம் ஈர்க்கும் 'வாஸ்கோடகாமா' பட க்ளிம்ஸ்

03:30 PM Jun 25, 2022 | kavidhasan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

நகுல், ஷங்கர் இயக்கத்தில் வெளியான 'பாய்ஸ்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் கதாநாயகனாக அறிமுகமானது 'காதலில் விழுந்தேன்' படத்தில் தான். அதன் பிறகு 'மாசிலாமணி', 'வல்லினம்', 'தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்' உள்ளிட்ட ஹிட் படங்களைக் கொடுத்துள்ளார். கடைசியாக இவர் நடிப்பில் 2018-ஆம் ஆண்டு 'செய்' படம் வெளியானது. அதன் பிறகு சின்ன திரை நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்தி வந்தார். இதனிடையே பி.சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகிவரும் 'வாஸ்கோடகாமா' படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜி கிருஷ்ணன் இயக்கும் இந்த படத்தில் கே.எஸ். ரவிக்குமார், மன்சூர் அலிகான், முனிஷ்காந்த் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். அருண் என்.வி இசையமைக்கிறார்.

இந்நிலையில் 'வாஸ்கோடகாமா' படத்தின் க்ளிம்ஸ் காட்சி வெளியாகியுள்ளது. இந்த க்ளிம்ஸ் காட்சியில் சினிமா, அரசியல், மருத்துவம் உள்ளிட்ட சில துறைகளில் நடக்கும் நிகழ்வுகளை காமெடி கலந்து சொல்லியிருப்பது போல் வெளியாகியுள்ளது. குறிப்பாக இந்த க்ளிம்ஸ் காட்சியில் வரும் வசனங்கள் பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT