nakkhul movie 'VASCODAGAMA'  Glimpse video released

நகுல்,ஷங்கர்இயக்கத்தில் வெளியான 'பாய்ஸ்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் கதாநாயகனாக அறிமுகமானது 'காதலில் விழுந்தேன்' படத்தில் தான். அதன் பிறகு 'மாசிலாமணி', 'வல்லினம்', 'தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்' உள்ளிட்டஹிட்படங்களைக்கொடுத்துள்ளார். கடைசியாக இவர் நடிப்பில் 2018-ஆம் ஆண்டு 'செய்' படம் வெளியானது. அதன் பிறகு சின்ன திரை நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்தி வந்தார். இதனிடையே பி.சுபாஸ்கரன்தயாரிப்பில் உருவாகிவரும் 'வாஸ்கோடகாமா' படத்தில் நடித்து வருகிறார்.ஆர்ஜிகிருஷ்ணன் இயக்கும் இந்த படத்தில் கே.எஸ். ரவிக்குமார்,மன்சூர்அலிகான்,முனிஷ்காந்த்உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். அருண் என்.வி இசையமைக்கிறார்.

Advertisment

இந்நிலையில் 'வாஸ்கோடகாமா' படத்தின்க்ளிம்ஸ்காட்சி வெளியாகியுள்ளது. இந்தக்ளிம்ஸ்காட்சியில்சினிமா, அரசியல், மருத்துவம் உள்ளிட்ட சில துறைகளில் நடக்கும் நிகழ்வுகளைகாமெடிகலந்து சொல்லியிருப்பது போல் வெளியாகியுள்ளது. குறிப்பாக இந்தக்ளிம்ஸ்காட்சியில் வரும் வசனங்கள் பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.

Advertisment