Advertisment

“இந்த மாதிரியான படங்கள் எடுக்க தனி தைரியம் வேண்டும்” - நக்கீரன் ஆசிரியர் பாராட்டு

Nakkheeran Gopal

கல்யாண் இயக்கத்தில் யோகி பாபு நாயகனாக நடித்திருக்கும் திரில்லர் காமெடி படம் 'ஷீ’. இப்படத்திற்கு சாம். சி.எஸ். இசையமைத்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

Advertisment

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட நக்கீரன் ஆசிரியர் பேசுகையில், “இந்தப் படத்தின் கதைக்கருதான் இந்த இசை வெளியீட்டிற்கு நான் வர காரணம். குழந்தை கடத்தல், பாலியல் குற்றங்கள் போன்றவை நடக்காமல் இருப்பதற்காக போராடும் நக்கீரன் சார்பில் இந்த விழாவிற்கு நான் வந்துள்ளேன். தொடர்ந்து நல்ல திரைப்படங்களை எடுக்க தயாரிப்பாளருக்கு எனது வாழ்த்துகள். சமூகத்தில் பாலியல் குற்றம் சம்பந்தமான பிரச்சனை வந்தாலே முதலில் எங்களிடம்தான் வருகிறார்கள் அது பற்றிய உண்மையை நாம்தான் வெளிக்கொண்டுவர வேண்டியுள்ளது. இது போன்ற திரைப்படங்கள் எடுக்க தனி தைரியம் தேவை. அந்த வகையில் இந்தத் திரைப்படத்திற்கு எனது வாழ்த்துகள்” எனத் தெரிவித்தார்.

Advertisment

nakkheeran gopal
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe