Skip to main content

வாவ்... சினேகன் கல்யாணத்தில் விருந்தினர்களுக்கு காத்திருந்த சர்ப்ரைஸ்!

Published on 29/07/2021 | Edited on 29/07/2021

 

 

 

தமிழ் சினிமாவில் 700க்கும் மேற்பட்ட படங்களில் பாடலாசிரியராக பணிபுரிந்துள்ள கவிஞர் சினேகன், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் மேலும் பிரபலமானார். தற்போது நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்து தீவிர அரசியலில் ஈடுபட்டுவரும் சினேகன், தொலைக்காட்சி நடிகை கன்னிகாவை இன்று (29.07.2021) கரம்பிடித்தார். சினேகன், கன்னிகா இருவரும் கடந்த எட்டு ஆண்டுகளாக காதலித்துவந்த நிலையில், இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. சென்னையில் உள்ள பிரபல தனியார் ஹோட்டலில் நடந்த இத்திருமணத்தை நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தலைமையேற்று நடத்திவைத்தார்.

 

நக்கீரன் ஆசிரியர் இத்திருமண நிகழ்வில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். இவ்விழாவில் திரைத்துறை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர். விழாவிற்கு வருகை தந்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக விருந்தினரின் பெயர் பொறிக்கப்பட்ட பனையோலையை சினேகன் வழங்கினார். அந்தப்பனையோலையில் தற்போதைய தமிழ் எழுத்துகள் மட்டுமின்றி பழங்காலத்திய தமிழி எழுத்துகளும் இடம்பெற்றிருந்தது விருந்தினர்களை ஆச்சர்யமும் நெகிழ்ச்சியும் அடையவைத்தது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நடிகையும் பாஜக பிரமுகருமான ஜெயலட்சுமி கைது

Published on 20/02/2024 | Edited on 20/02/2024
actress and bjp member jayalakshmi arrest

பாடலாசிரியரும் மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகியுமான சினேகன், தான் நடத்தி வருகிற ‘சினேகம்’ என்ற அறக்கட்டளையின் பெயரில் சமூக வலைத்தளத்தில் போலிக் கணக்குகள் தொடங்கி பணம் வசூலித்து வருவதாக நடிகையும் பாஜக பிரமுகருமான ஜெயலட்சுமியின் மீது சென்னை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். இதன் பிறகு அதே பெயரில் அறக்கட்டளை நடத்தி வரும் ஜெயலட்சுமி, பொதுவெளியில் தன் மீது அவதூறு பேசியுள்ளதாக சினேகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். 

பின்பு இருவரையும் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் விசாரணைக்கு அழைத்து சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். ஆனால், சினேகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகை ஜெயலட்சுமி மீண்டும் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். மேலும் இது தொடர்பாக எழும்பூர் நீதிமன்றத்திலும் ஜெயலட்சுமி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, அவதூறு பரப்பும் வகையில் பேசிய பாடலாசிரியர் சினேகன் மீது வழக்குப்பதிவு செய்ய எழும்பூர் மேஜிஸ்ட்ரேட் உத்தரவிட்டார். அதனடிப்படையில் திருமங்கலம் காவல்துறையினர் சினேகன் மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என சினேகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, திருமங்கலம் போலீஸார் சினேகன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய உத்தரவிடப்பட்டது. 

இதனிடையே சினேகன், தான் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் குற்றம்சாட்டி எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, நடிகையும் பாஜக மாநில துணைத் தலைவியுமான ஜெயலட்சுமி மீது வழக்குப் பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது. அதன் அடிப்படையில் ஜெயலட்சுமி மீது சென்னை திருமங்கலம் போலீசார் சட்டப் பிரிவு 420 மற்றும் 465 என 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்திருந்தனர். 

இந்த நிலையில், இன்று சென்னை திருமங்கலம் பகுதியில் உள்ள ஜெயலட்சுமி வீட்டில் போலீஸார் சோதனை நடத்தினர். 3 மணி நேரம் இந்த சோதனை நடைபெற்ற நிலையில், தற்போது ஜெயலட்சுமியை போலீஸார் கைது செய்துள்ளனர். 

Next Story

சினேகன் மீதான வழக்கு ரத்து

Published on 06/02/2024 | Edited on 06/02/2024
snehan jayalakshmi issue

பாடலாசிரியரும் மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகியுமான சினேகன், தான் நடத்தி வருகிற ‘சினேகம்’ என்ற அறக்கட்டளையின் பெயரில் சமூக வலைத்தளத்தில் போலிக் கணக்குகள் தொடங்கி பணம் வசூலித்து வருவதாக நடிகையும் பாஜக பிரமுகருமான ஜெயலட்சுமியின் மீது சென்னை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். இதன் பிறகு அதே பெயரில் அறக்கட்டளை நடத்தி வரும் ஜெயலட்சுமி, பொதுவெளியில் தன் மீது அவதூறு பேசியுள்ளதாக சினேகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். 

பின்பு இருவரையும் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் விசாரணைக்கு அழைத்து சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். ஆனால், சினேகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகை ஜெயலட்சுமி மீண்டும் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். மேலும் இது தொடர்பாக எழும்பூர் நீதிமன்றத்திலும் ஜெயலட்சுமி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது அவதூறு பரப்பும் வகையில் பேசிய பாடலாசிரியர் சினேகன் மீது வழக்குப்பதிவு செய்ய எழும்பூர் மேஜிஸ்ட்ரேட் உத்தரவிட்டார். அதனடிப்படையில் திருமங்கலம் காவல்துறையினர் சினேகன் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என சினேகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவானது நீதிபதி தமிழ்ச்செல்வி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சினேகன் தரப்பு, ஜெயலட்சுமி மீது தான் கொடுத்த புகாருக்கு பதில் புகாராக, ஜெயலட்சுமி தன் மீது பொய் புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில் தன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது என்ற வாதம் முன்வைக்கப்பட்டது. இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, சினேகன் மீது திருமங்கலம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளார்.