தமிழ் சினிமாவில் 700க்கும் மேற்பட்ட படங்களில் பாடலாசிரியராக பணிபுரிந்துள்ள கவிஞர் சினேகன், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் மேலும் பிரபலமானார். தற்போது நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்து தீவிர அரசியலில் ஈடுபட்டுவரும் சினேகன், தொலைக்காட்சி நடிகை கன்னிகாவை இன்று (29.07.2021) கரம்பிடித்தார். சினேகன், கன்னிகா இருவரும் கடந்த எட்டு ஆண்டுகளாக காதலித்துவந்த நிலையில், இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. சென்னையில் உள்ள பிரபல தனியார் ஹோட்டலில் நடந்த இத்திருமணத்தை நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தலைமையேற்று நடத்திவைத்தார்.
நக்கீரன் ஆசிரியர்இத்திருமண நிகழ்வில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். இவ்விழாவில் திரைத்துறை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர். விழாவிற்கு வருகை தந்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக விருந்தினரின் பெயர் பொறிக்கப்பட்ட பனையோலையை சினேகன் வழங்கினார். அந்தப்பனையோலையில் தற்போதைய தமிழ் எழுத்துகள் மட்டுமின்றி பழங்காலத்திய தமிழி எழுத்துகளும் இடம்பெற்றிருந்தது விருந்தினர்களை ஆச்சர்யமும் நெகிழ்ச்சியும் அடையவைத்தது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-07/88.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-07/89.jpg)