Advertisment

“அழகிய கண்ணே பட இயக்குநரின் துணிச்சலை பாராட்டுகிறேன்” - நக்கீரன் ஆசிரியர்

nakkheeran editor about azhagiya kanne movie

Advertisment

சேவியர் பிரிட்டோவின் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் அறிமுக இயக்குநர் ஆர். விஜயகுமார் இயக்கத்தில் உருவான படம் தான் 'அழகிய கண்ணே'. இந்த படத்தில் லியோ சிவகுமார் கதாநாயகனாகவும், சஞ்சிதா ஷெட்டி கதாநாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். பிரபல நகைச்சுவை பட்டிமன்ற பேச்சாளர் ஐ. லியோனி மகனான லியோ சிவகுமார் இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகிறார்.

இந்த திரைப்படம் நேற்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில் அழகிய கண்ணே திரைப்படத்தை தனி திரையரங்கில் திரைப் பிரபலங்களுக்காகவும் பத்திரிகையாளர்களுக்காகவும் ப்ரிமியர் காட்சி நேற்று திரையிடப்பட்டது. அந்த நிகழ்வில் கலந்து கொண்டநக்கீரன் ஆசிரியர், ராமராஜன் மற்றும் பூர்ணிமா பாக்கியராஜ் உள்ளிட்ட பலர்பாராட்டி வருகின்றனர்.

அதில் நக்கீரன் ஆசிரியர் பேசியதாவது, “நான் பத்திரிகையாளர் காட்சிக்குசென்று பார்ப்பது இதுவே முதல் முறை. சாதி இன்னும் சாகவில்லை என்று அழகிய கண்ணே இயக்குநர் தெளிவாக சொல்லி இருக்கிறார். க்ளைமாக்ஸ் காட்சியில் காதலர்களை சேர்த்து வைத்து விடுவார்கள் என்று ஆவலாக இருந்தேன். ஆனால் சாதி இன்னும் சாகவில்லை என்று கதாநாயகனை எரித்தது மனதுக்குள் இன்னும் நெருடலாக இருந்தது. இந்த படத்தில் நடித்த கதாநாயகனும் கதாநாயகியும் கதைக்கு தேவைக்கேற்ப மிகவும் யதார்த்தமாக நடித்திருக்கிறார்கள். கதாநாயகன் க்ளைமாக்ஸ் காட்சியில் என்னை வாழ விடுங்கள் என்று சொன்னதற்கு பிறகும் அவனை கொன்று விட்டு சாதியும், மதமும் நம்மை விட்டு போகவில்லை என்று இயக்குநர் தெளிவாய் கூறியிருக்கிறார். இந்த படத்தை இயக்கிய இயக்குநரின் துணிச்சலை நான் பாராட்டுகிறேன்” என்றார்.

Advertisment

அதைத்தொடர்ந்து திரைப் பிரபலம் ராமராஜன் பேசியதாவது, “படம் அருமையாக இருந்தது. இந்த படத்தை எடுத்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் இந்த படத்தில் நடித்த லியோ சிவகுமார், சஞ்சிதா ஷெட்டிக்கும் எனது பாராட்டுக்களை தெரிவிக்கிறேன். நான் நடித்த சாமானியன் படத்தில் எனது மருமகனாக நடித்த லியோ சிவகுமார் இந்த அழகிய கண்ணே படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகியிருக்கிறார். இந்த படத்தின் தலைப்பு மாதிரி சொல்ல வந்த கருத்தை மிகவும் அழகாக சொல்லியிருக்கிறார்கள். இந்த படத்தில் நடித்த அத்தனை நடிகர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். மேலும், நான் நடித்த சாமானியன் படத்தின் படப்பிடிப்பு முடிந்து அடுத்த மாதம் வெளியாக இருக்கிறது” என்றார்.

Dindigul I. Leoni
இதையும் படியுங்கள்
Subscribe