ஷங்கர் இயக்கத்தில் 2003ஆம் ஆண்டு வெளியான படம் பாய்ஸ். இந்த படத்தில்ஒரு இளைஞர் பட்டாளமே நடித்திருந்தது. அதில் ஒருவர்தான் நடிகர் நகுல்.
Advertisment
இதன்பின் 2008ஆம் ஆண்டு 'காதலில் விழுந்தேன்' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இந்த படம் அவருக்கு மாபெரும் வெற்றியைத் பெற்று தந்தது. ஆனால், அதன்பின் அவர் ஹீரோவாக நடித்த படங்கள் பெரிதும் சோபிக்கவில்லை.
Advertisment
இவர் 2016ஆம் ஆண்டு, தான் காதலித்து வந்த ஸ்ருதி என்ற பெண்ணை திருமணம் செய்தார். அண்மையில் நகுல் - ஸ்ருதி தம்பதினருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இவர்களுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தற்போது தனது மகளை கையில் ஏந்தியதுபோன்று புகைப்படமொன்றை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். அதில், “என் மகள் இந்த உலகத்திற்கு வந்து ஒரு வாரம் ஆகிறது என்பதை என்னால் நம்ப முடியவில்லை. இந்த ஒரு வாரம் மிக வேகமாக பறந்துவிட்டது. நாங்கள் எப்போதும் காட்டக்கூடியதை விட அதிகமாக உன்னை நேசிக்கிறோம்! என கூறி இப்படி ஒரு இளவரசியை கொடுத்த மனைவி ஸ்ருதிக்கு நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.