Advertisment

ரஜினியுடன் பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சந்திப்பு

48

ரஜினிகாந்த், தனது 50வது ஆண்டுகாலத் திரைபயணத்தை நிறைவு சமீபத்தில் நிறைவு செய்தார். இவர் நடித்த முதல் படமான ‘அபூர்வ ராகங்கள்’ கடந்த 15ஆம் தேதியுடன் 50 ஆண்டுகளை கடந்துள்ளது. இன்று வரை தனது ஸ்டைலான நடிப்பாலும், எனர்ஜியுடன் தோன்றும் வசீகரத்தாலும், பஞ்ச் வசனங்களாலும் தொடர்ந்து ரசிகர்களை ரசிக்க வைத்துக் கொண்டிருக்கிறார். 

Advertisment

இப்போது ரஜினி ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் கடந்த 14ஆம் தேதி கூலி படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. அனால் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று ரூ. 300 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

இதனிடையே 50 ஆண்டுகாலம் திரைத்துறையில் பயணித்த ரஜினிக்கு பிரதமர் மோடி முதல் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், கமல் உள்ளிட்ட பல்வேறு முன்னணி திரை பிரபலங்கள் எக்ஸ் பக்கம் மூலமாக வாழ்த்து தெரிவித்தனர். அவர்கள் அனைவருக்கும் ரஜினி எக்ஸ் பக்கம் மூலம் நன்றி தெரிவித்தார். இந்த நிலையில் ரஜினிகாந்தின் 50ஆண்டு காலத் திரைப்பயணம் தொடர்பாக பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். ரஜினி வீட்டில் சந்தித்த அவர், பிள்ளையார் சிலையையும் ரஜினிக்கு பரிசாக வழங்கினார். 

Actor Rajinikanth nainar nagendran
இதையும் படியுங்கள்
Subscribe