Advertisment

அட்லீ படத்தை கையில் எடுத்த நாக்பூர் காவல்துறை!

Nagpur police use Attlee jawan movie image for awareness

'ராஜாராணி' படத்தின் மூலம் இயக்குநராக திரையுலகிற்கு அறிமுகமானவர் அட்லீ. இதனை தொடர்ந்து நடிகர் விஜய்யை வைத்து 'தெறி', 'மெர்சல்', 'பிகில்' ஆகிய படங்களை இயக்கினார். மூன்று படங்களுமே நல்ல வரவேற்பை பெற்றதன் மூலம் முன்னணி இயக்குநராக உயர்ந்தார். 'பிகில்' படத்தைத் தொடர்ந்து, அட்லீ தற்போது ஷாருக்கானை வைத்து இந்தியில் ஒரு படம் இயக்கி வருகிறார். இதன் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகிறார் அட்லீ. ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

Advertisment

இந்நிலையில் இந்த டீசரில் இடம்பெற்றுள்ள ஒரு காட்சியை நாக்பூர் காவல்துறையினர் பயன்படுத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். ஜவான் டீசரில் ஷாருக்கான் அடிபட்டு தலை முழுவதும் கட்டுப்போட்டு இருப்பார். இதைசுட்டிக்காட்டி வாகனம் ஓட்டும் போது தலைக்கவசம் அணியவில்லை என்றால் இப்படி காயம் பட்டு கட்டுப்போட நேரிடும் என விழிப்புணர்வு செய்கின்றனர். இது குறித்த புகைப்படத்தைநாக்பூர் காவல்துறையினர் தங்களது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில்பகிர்ந்துள்ளனர். இதையடுத்து தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

atlee sharukh khan
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe