Advertisment

கங்கனாவை சாடிய நக்மா! 

nagma

கங்கனா ரணாவத் அண்மையில் மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல இருப்பதாக பேசி பெரும் சர்ச்சையை கிளப்பினார். அதனை தொடர்ந்து அவருக்கும் சிவசேனா கட்சிக்கும் இடையே பிரச்சனை உருவாகியுள்ளது.

Advertisment

இந்நிலையில் நடிகை நக்மா கங்கனாவை சாடி ட்வீட் செய்துள்ளார். அதில், "மகாராஷ்டிரா, மும்பையின் பெயரைக் கங்கனா கெடுத்து வருகிறார். உலக அளவில் மும்பை மகாராஷ்டிராவின் பெயரைக் கெடுப்பதில் முக்கிய நபராக இருக்கிறார். ஒட்டுமொத்த பாலிவுட்டுக்கும் அவப்பெயரைக் கொண்டு வருகிறார். முதலில் வாரிசு அரசியல் என்று ஆரம்பித்தார். பின் பாலிவுட்டுக்குள்ளே இருப்பவர்கள் வெளியே இருப்பவர்களுக்கு எதிரானவர்கள் என்று சொன்னார். இதன்பின் மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்றார். இதைகண்டிப்பாக ஏற்றுக்கொள்ள முடியாது" என்று தெரிவித்திருந்தார்.

Advertisment

முன்னதாக, கங்கனாவுக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டபோது, "பிரதமர் வரிப்பணத்தை வீணடிக்கிறார். தனது கட்சிக்கு ஏற்றாற்போல பேசுவதால் கங்கனா ரணாவத்துக்கு ஒய் பிரிவு பாதுகாப்பைகொடுத்துள்ளார். ஆனால், கங்கனாமும்பைக்கு எதிராகபேசுகிறார். பாலிவுட் மூலமாகபுகழடைந்திருப்பவர் இன்று பாலிவுட்டைப் பற்றி, அவருக்கு அத்தனையையும் தந்திருக்கும் மும்பை நகரத்தைபற்றி அவதூறு பேசுகிறார்" என்று நக்மா கருத்துபகிர்ந்திருந்தார்.

Kangana Ranaut nagma
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe