/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/373_4.jpg)
ஸ்ரீராம் பத்மநாபன் இயக்கத்தில் நாகேஷ் பேரன் பிஜேஷ் நாகேஷ் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் வானரன். ஆரஞ்ச் பிக்சர்ஸ் சார்பில் ராஜேஷ் பத்மநாபன், சுஜாதா ராஜேஷ் தயாரித்துள்ள இப்படத்தில்அக்ஷயா கதாநாயகியாக நடிக்க லொள்ளு சபா ஜீவா, தீபா சங்கர், ஆதேஷ் பாலா, நாஞ்சில் விஜயன், எஸ்.எல் பாலாஜி, பேபி வர்ஷா, வெங்கட்ராஜ் , சிவகுரு, ராம்ராஜ், வெடிக்கண்ணன், மேடை கலைஞர்களான நாமக்கல் விஜயகாந்த், ஜூனியர் டி.ஆர் ஆகியோர் நடித்துள்ளனர். ஷாஜகான் பின்னணிஇசையும், செந்தமிழ் பாடல்களையும் இயற்றியுள்ளனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/372_6.jpg)
இப்படத்தில் மூன்று பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இதன் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதனைச்சுற்றியுள்ள இடங்களிலும் 30 நாட்களில் திட்டமிட்டபடி ஒரே கட்ட படப்பிடிப்பாக நடைபெற்று முடிவடைந்தது. இதன் நிறைவு கட்ட பணிகள் முடிவடைந்த நிலையில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இப்படம் பகல் வேஷம் என்னும் கலையை பின் தொடரும் ஆஞ்சநேயர் வேடம் அணிபவர்களின் வாழ்வியலையும், தந்தை மகள் உறவை சொல்லும் கதைக் களத்தையும் கொண்டு உருவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)