Nagarjuna's son Akhil Akkineni marriage

நாகர்ஜுனா - அமலா தம்பதியின் மகன் அகில் அக்கினேனி. தெலுங்கில் வளர்ந்து வரும் நடிகராக உள்ள இவர் ஜைனப் ராவ்ட்ஜி என்பவரை நீண்ட காலமாக காதலித்து வந்தார். இருவருக்கு கடந்த ஆண்டு நவம்பரில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த நிலையில் இருவருக்கும் ஹைதராபாத்தில் இன்று அதிகாலை திருமணம் நடைபெற்றுள்ளது. தெலுங்கு பாரம்பரிய முறைப்படி நடந்த இந்த திருமணம் 3 மணிக்கு நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

Advertisment

இந்த திருமணத்தில் மணமக்களின் குடும்பத்தினர், நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டுள்ளனர். நாகர்ஜூனாவின் முதல் மகனான நடிகர் நாக சைதன்யா அவரது மனைவி நடிகை சோபிதா துலிபாலாவுடன் கலந்து கொண்டார். மேலும் திருமணத்தில் இயக்குநர் பிரஷாந்த் நீல், கிரிக்கெட் வீரர் திலக் வர்மா, நடிகர் சர்வானந்த் உள்ளிட்டோரும் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

Advertisment

Nagarjuna's son Akhil Akkineni marriage

மூத்த தெலுங்கு நடிகரான சிரஞ்சீவி, அவரது குடும்பத்தினருடன் திருமணம் தொடர்பான நேற்று நடந்த நிகழ்வில் கலந்து கொண்டார். இந்த சூழலில் திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இந்த புது மணத் தம்பதிகளுக்கு திரை பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.