Advertisment

'ஏ.கே 61' படத்தில் குவியும் நட்சத்திர பட்டாளம்!

Nagarjuna or Mohanlal, who will act with ajith ak61 film

இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் 'வலிமை' படத்தில் நடித்துள்ளார். இதில் அஜித்துக்கு ஜோடியாக ஹுமா குரேஷி நடித்துள்ளார். பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயாபடத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். இப்படம் பிப்ரவரி 24 ஆம் தேதி திரையரங்குகளில்வெளியாகவுள்ளது.

Advertisment

இதனைத்தொடர்ந்துநடிகர் அஜித்தின் 61 வது படத்தை எச் வினோத் இயக்க, போனிகபூர் தயாரிக்கவுள்ளார். உலக அளவில் மக்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து இப்படம் பேசவுள்ளதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் இயக்குநர் எச். வினோத் கூறியிருந்தார்.

Advertisment

இந்நிலையில் இப்படம் குறித்தபுதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, 'ஏ.கே 61' படத்தில் மூத்தபோலீஸ் கமிஷனர் கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல நடிகர் மோகன் லால் மற்றும் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா ஆகியோரிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. பேச்சுவார்த்தை வெற்றியடையும் பட்சத்தில் இருவரில் ஒருவர் இப்படத்தில் நடிக்க உள்ளதாகவும்,விரைவில் இது குறித்தஅதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ACTOR AJITHKUMAR ajith AK61 valimai
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe