Advertisment

ரசிகரை நேரில் சந்தித்து வருத்தம் தெரிவித்த நாகர்ஜுனா!

Nagarjuna met the fan in person and expressed regret

Advertisment

இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடித்துக் கொண்டிருக்கும் படம் ‘குபேரா’. இப்படம் தனுஷின் 51ஆவது படமாக உருவாகிறது. ஸ்ரீவெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகிறது. இந்தப் படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க தெலுங்கு முன்னணி நடிகர் நாகர்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார்.

இந்த நிலையில், குபேரா படத்தின் படப்பிடிப்பு பல இடங்களில் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் அடுத்த கட்ட படிப்பிடிப்பிற்காக தனுஷ், நாகர்ஜுனா உள்ளிட்ட நடிகர்கள் ஐதராபாத்திற்கு விமானம் மூலம் சென்றனர். அப்போது, விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த நாகர்ஜுனாவிடம், அங்கிருந்து முதியவர் ஒருவர் அருகில் வந்து தொட்டு பேச முயன்றார். அப்போது, நாகர்ஜுனாவின் பாதுகாவலர் ஒருவர் அந்த முதியவரை பிடித்து கீழே தள்ளிவிட்டார். இந்தச் சம்பவத்தை கவனிக்காமல் நாகர்ஜுனாவும் அங்கிருந்து சென்றார்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக நாகர்ஜுனா தெரிவித்தார். இது குறித்து அவர் அந்த வீடியோவை பகிர்ந்து, ‘இது இப்போதுதான் என்னுடைய கவனத்திற்கு வந்தது. இது கண்டிப்பாக நடந்திருக்கக் கூடாது. நான் அவரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். மேலும், எதிர்காலத்தில் இது போன்று சம்பவங்கள் நடக்காமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்களை எடுப்பேன்’ எனப் பதிவிட்டார்.

Advertisment

இந்த நிலையில், தனது பாதுகாவலரால் தள்ளிவிடப்பட்ட அந்த ரசிகரை விமான நிலையத்தில் நாகர்ஜுனா சந்தித்து பேசியுள்ளார். அப்போது, அந்த ரசிகரை கட்டியணைத்த நாகர்ஜுனா, ‘உங்கள் மீது எந்த தப்பும் இல்லை’ எனக் கூறி அவரை தள்ளிவிட்டதற்கு வருத்தம் தெரிவித்தார்.

viral video nagarjuna
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe