‘கூலி’ படத்தில் இணைந்த டாப் நடிகர்; எகிறும் எதிர்பார்ப்பு 

nagarjuna jond in rajini lokesh kanagaraj coolie movie

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் ‘கூலி’. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் டைட்டில் டீசர் கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் ரஜினிகாந்த் லுக் டெஸ்ட் செய்த புகைப்படத்தை லோகேஷ் கனகராஜ் வெளியிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து இப்படத்தில் சத்யராஜ் நடித்து வருவதாக கூறியிருந்தார். பின்பு ஸ்ருதிஹாசன் இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இப்படத்திலிருந்து தொடர்ந்து கதாபாத்திர அறிமுக போஸ்டரை படக்குழு வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் மலையாள நடிகர் சௌபின் சாஹிர் இப்படத்தில் தயாள் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக நேற்று தெரிவித்திருந்தது. இதற்கு முன் கன்னட நடிகர் உபேந்திரா இப்படத்தில் இணைந்துள்ளதாக கூறப்பட்டது.

இந்நிலையில் கூலி படத்தில் அடுத்ததாக இணைந்துள்ள கதாபாத்திர போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி தெலுங்கு முன்னணி நடிகர் நாகர்ஜுனா இப்படத்தில் இணைந்துள்ளதாகவும் சைமன் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் இது தொடர்பான போஸ்டரையும் வெளியிட்டுள்ளது. இன்று அவர் தனது பிறந்தநாளை கொண்டாடி வருவதால் இதை முன்னிட்டு அவருக்கு வாழ்த்தும் தெரிவித்துள்ளது. இரண்டு முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்து வருவதால் கூலி படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் தற்போது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இவர் தற்போது தனுஷின் குபேரா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Actor Rajinikanth Coolie lokesh kanagaraj nagarjuna
இதையும் படியுங்கள்
Subscribe