Advertisment

இரண்டாவது திருமணம் குறித்து விளக்கம் தந்த நாக சைதன்யா

Naga Chaitanya explaining about his second marriage

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நாக சைதன்யா. இவர் நடிகை சமந்தாவை காதலித்து 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். பின்பு இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விவாகரத்து செய்வதாக அறிவித்தனர். சமீபத்தில் நாகா சைதன்யா இரண்டாவது திருமணம் செய்ய தயாராகி வருகிறார் எனதகவல் வந்தது.

Advertisment

இந்நிலையில் இந்த தகவலை நாக சைதன்யா தரப்பு மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாக சைதன்யா மற்றும் சமந்தா இருவரின் விவாகரத்து நீதிமன்றத்தில் நடந்து வருவதாகவும், இரண்டாவது திருமணம் குறித்த எண்ணம் தற்போது நாக சைதன்யாவிற்கு இல்லை எனவும் அந்த தரப்பு விளக்கம் அளித்துள்ளது.

Advertisment

நாக சைதன்யா வெங்கட் பிரபு இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இப்படத்தை ஸ்ரீநிவாஸா சித்தூரி தயாரிக்கிறார்.

samantha
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe