Advertisment

"திரை வாழ்க்கை வேறு, தனிப்பட்ட வாழ்க்கை வேறு" - விவாகரத்து குறித்து சமந்தா கணவர் விளக்கம்!

bvfsbdfnd

Advertisment

தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையான சமந்தா, தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரும் பிரபல நடிகர் நாகார்ஜுனாவின் மகனுமான நாக சைதன்யாவை கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்து மத வழக்கத்தின்படியும் கிறிஸ்தவ மத வழக்கத்தின்படியும் இவர்களது திருமணம் நடந்தது. திருமணத்துக்குப் பின் தொடர்ந்து சினிமாவில் நடித்துவரும் நடிகை சமந்தாவுக்கும், அவரது கணவர் நாக சைதன்யாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் பிரியப் போகிறார்கள் என்றதகவல் வெகுநாட்களாகவே உலா வந்தவண்ணம் இருக்கிறது. சமீபத்தில் இந்த விவகாரம் குறித்து நடிகை சமந்தாவிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, அதற்கு மௌனம் மட்டுமே காத்தார். இந்நிலையில், தற்போது இந்த விவகாரம் குறித்து நடிகர் நாக சைதன்யா விளக்கம் அளித்துள்ளார். அதில்...

“நான் சிறுவயதில் இருந்தே திரைத்துறை வாழ்க்கை வேறு, தனிப்பட்ட வாழ்க்கை வேறு என்பதைப் பார்த்து வளர்த்தவன். இந்தப் பழக்கம் என்னுடைய தாய், தந்தையிடம் இருந்து எனக்கு வந்தது. அவர்கள் இருவரும் படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்கு வந்த பின்னர், சினிமா பற்றி எதுவும் பேச மாட்டார்கள். அது நல்ல பழக்கம் என்பதால் நானும் அதை கடைப்பிடித்து வருகிறேன். சமந்தாவுடன் விவாகரத்து என்ற செய்தி பரவிவருவது, எனக்கு மிகுந்த வேதனையாக இருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் ஒரு செய்தியை மறக்கடிக்க இன்னொரு செய்தி உடனே வந்துவிடுகிறது. இன்று ஒரு செய்தி பரபரப்பாக பேசப்பட்டால், நாளை இன்னொரு செய்தி மிகவும் பரபரப்பாக பேசப்படும். முந்தைய நாள் செய்திகள் மறந்துவிடுகின்றன. இந்தப் புரிதல் எனக்குள் வந்தவுடன் நானும் இதுகுறித்து கவலைப்படுவதை நிறுத்திவிட்டேன்” என கூறியுள்ளார்.

samantha
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe