Naga Chaitanya denies the rumours of selling wedding video rights

தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நாக சைதன்யா. தமிழில் வின்ணைத்தாண்டி வருவாயா படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார். பின்பு வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான கஸ்டடி படத்தில் நடித்திருந்தார். இதையடுத்து தண்டல் என்ற தெலுங்கு படத்தில் தற்போது நடித்து வருகிறார். இப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி வெளியாகிறது.

Advertisment

இதனிடையே 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தின் தெலுங்கு ரீமேக்கில் ஹீரோவாக நடித்த அவர், அப்படத்தில் ஹூரோயினாக நடித்த சமந்தாவை காதலித்து 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார். அதன் பிறகு 2021ஆம் ஆண்டு சில கருத்து வேறுபாடு காரணமாக சமந்தாவை பிரிந்தார். இதையடுத்து பாலிவுட் நடிகை ஷோபிதா துலிபாலாவை காதலித்து வந்தார். நடிகை ஷோபிதா துலிபாலா பொன்னியின் செல்வன் படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்களிடம் அறிமுகமாகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

இதனைத் தொடர்ந்து நாக சைதன்யாவுக்கும் ஷோபிலா துலிபாலாவுக்கும் கடந்த ஆகஸ்டில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. அடுத்த மாதம் 4ஆம் தேதி ஹைதராபாத்தில் அவர்களது குடும்ப ஸ்டூடியோவான அண்ணாபூர்னா ஸ்டூடியோஸ் இடத்தில் நடக்கவுள்ளது. இதையொட்டி திருமணத்திற்கு முன் நடக்கும் நிகழ்ச்சிகள் தொடங்கியுள்ளது.

இதனிடையே சமீபத்தில் இவர்களது திருமணம் ஆவணப்படமாக நெட் ஃபிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகவுள்ளதாகவும் அதற்காக நெட் ஃபிளிக்ஸ் நிறுவனம் ரூ.50 கோடி ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில் இத்தகவல் குறித்து நாக சைதன்யா விளக்கம் அளித்துள்ளார். சமீபத்திய பேட்டியில் பேசிய அவர், “அது தவறான செய்தி. அப்படி எதுவும் ஒப்பந்தம் போடப்படவில்லை” என்றுள்ளார்.

Advertisment