/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/35_72.jpg)
தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நாக சைதன்யா. தமிழில் வின்ணைத்தாண்டி வருவாயா படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார். பின்பு வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான கஸ்டடி படத்தில் நடித்திருந்தார். இப்படம் ஒரே சமயத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் படமாக்கப்பட்டது. இதையடுத்து தண்டல் என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/34_86.jpg)
இதனிடையே 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தின் தெலுங்கு ரீமேக்கில் ஹீரோவாக நடித்த அவர், அப்படத்தில் ஹூரோயினாக நடித்த சமந்தாவை காதலித்து 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார். அதன் பிறகு 2021ஆம் ஆண்டு சில கருத்து வேற்பாடு காரனமாக சமந்தாவை பிரிந்தார். இதையடுத்து சமீப காலமாக பாலிவுட் நடிகை ஷோபிதா துலிபாலாவை காதலித்து வருவதாக தகவல் வெளியானது. இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலானது. நடிகை ஷோபிதா துலிபாலா பொன்னியின் செல்வன் படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்து தமிழி ரசிகர்களிடம் அறிமுகமாகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நாக சைதன்யாவுக்கும் ஷோபிலா துலிபாலாவுக்கும் இன்று ஹைதராபாத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் இருவீட்டார் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதனை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)