Advertisment

'மாநாடு' தெலுங்கு ரீமேக்கில் நடிக்கும் பிரபலங்கள்

naga chaitanya and pooja hegde play maanaadu film telugu remake

இயக்குநர்வெங்கட் பிரபு இயக்கத்தில், நடிகர் சிம்பு ‘மாநாடு’ படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க, சுரேஷ் காமாட்சி தயாரித்திருந்தார். பல பிரச்சனைகளைத் தாண்டி வெளியான இப்படம்,வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப்பெற்றது. இதனை தொடர்ந்து இப்படத்தை பிற மொழியில் ரீமேக் செய்யும் பணிகளில் தயாரிப்பாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில்சமீபத்தில் 'மாநாடு' படத்தின் தெலுங்கு உரிமையை நடிகர் ராணா டகுபதியின் தந்தை டகுபதி சுரேஷ் பாபு கைப்பற்றியுள்ளதாக அறிவித்திருந்தார்

Advertisment

இந்நிலையில் 'மாநாடு' படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிப்பவர்கள் குறித்ததகவல் வெளியாகியுள்ளது. அதன்படி சிம்பு கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் நாக சைதன்யாவும், கல்யாணி பிரியதர்ஷன் கதாபாத்திரத்தில் பூஜா ஹெக்டேவும்நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தை தமிழில் இயக்கிய வெங்கட் பிரபுவே தெலுங்கிலும் இயக்கவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Advertisment

venkat prabhu pooja hegde actor simbu maanaadu
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe