இளையராஜா குறித்து நாக சைதன்யா நெகிழ்ச்சி

Naga Chaitanya about Ilaiyaraaja

நாக சைதன்யா தற்போது வெங்கட் பிரபு இயக்கும் 'கஸ்டடி' படத்தில் நடித்து முடித்துள்ளார். ஸ்ரீநிவாஸா சித்தூரி தயாரிக்கும் இப்படத்தில் க்ரீத்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் இப்படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு அனைத்தையும் படக்குழு முடித்துள்ளது. வருகிற மே 12 ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் இப்படம் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இளையராஜாவை சந்தித்துள்ளார் நாக சைதன்யா. இது தொடர்பான புகைப்படத்தை அவரது ட்விட்டரில் பகிர்ந்து நெகிழ்ச்சியுடன் ஒரு பதிவைப் பகிர்ந்துள்ளார்.

அந்தப் பதிவில், "இசைஞானி இளையராஜா சாரை சந்தித்ததும் என் முகத்தில் பேரானந்தம். அவரது பாடல்கள் வாழ்க்கையின் பல பயணங்களுக்கு அழைத்துச் சென்றன. அவருடைய பெயரை என் படங்களில் பயன்படுத்தியுள்ளேன். அவர் தற்போது என் படத்துக்கு இசையமைக்கிறார். மிகவும் நெகிழ்ச்சியாக உள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த சந்திப்பு ஹைதராபாத்தில் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. நாளை 26 ஆம் தேதி ஹைதராபாத்தில் இளையராஜா இசை கச்சேரி நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Ilaiyaraaja
இதையும் படியுங்கள்
Subscribe