Naga Chaitanya

Advertisment

கடந்த 1994ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற படம் ‘ஃபாரஸ்ட் கம்ப்’. இப்படத்தின் இந்தி ரீமேக்கில் அமீர்கான் நாயகனாக நடிக்க உள்ளார். ‘லால் சிங் சட்டா’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில், அமீர்கானுக்கு ஜோடியாக கரீனா கபூர் நடிக்கிறார். இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.

அமீர்கான் மற்றும் விஜய் சேதுபதி இருவரும் ராணுவ வீரர்கள் கதாபாத்திரத்தில் நடிக்க இருந்த நிலையில், கால்ஷீட் பிரச்சனை காரணமாக இப்படத்தில் இருந்து விஜய் சேதுபதி வெளியேறிவிட்டதாகசில மாதங்களுக்கு முன் தகவல் வெளியானது. இந்த நிலையில், விஜய் சேதுபதி நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் பிரபல தெலுங்கு நடிகரும், நடிகை சமந்தாவின் கணவருமான நாக சைதன்யா நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.