/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/45_39.jpg)
ஷரன் இயக்கத்தில் பரத் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'நடுவன்'. நடுவன் என்பதற்கு மத்தியத்தர வாழ்க்கை வாழும் ஒருவன் எனப் பொருள். வஞ்சம் மற்றும் அறியாமையின் இடையில் சிக்கி ஏமாறும் முதன்மை கதாபாத்திரமான பரத்தின் பயணம்தான் இப்படத்தின் கரு. ஏமாற்றத்தின் பின்னணியில் ​​அவர் தனது அறியாமையை உணர்ந்து தன்னை ஏமாற்றுபவர்கள் ஏன் அந்த முடிவுகளை எடுக்கிறார்கள் என்பதை அறிய முயல்கிறார்.
அதை விருப்பத்தின் பேரில் அவர்கள் செய்கிறார்களா அல்லது கட்டாயப்படுத்தப்படுகிற சூழ்நிலையில் தவறிழைக்கிறார்களா என்பதைக் கண்டுபிடிக்க முயல்கிறார். கதாநாயகன் அந்த பாதையில் செல்லும்போது, ​​ சில கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டிவருகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக அவர் நேசித்து நம்பியவர்களின் ஏமாற்றுதல் மற்றும் வஞ்சத்தை அவர் கண்டுபிடித்துச் சமாளிக்க வேண்டும்.
இந்த அதிர்ச்சியூட்டும் பயண சூழ்நிலைகளில் அவர் செல்லும்போது கதை ஒரு திரில்லராக மாறுகிறது. இந்த பயணத்தில் அவர் வெற்றி பெறுவாரா, அல்லது நேசிப்பவர்களுக்காகத்தனது அறியாமைக்கு அடிபணிவாரா என்பதே படத்தின் மீதி கதை. பரபரப்பான திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படம், சோனி லைவ் ஓடிடி தளத்தில் விரைவில் வெளியாகவுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)