விரைவில் வெளியாகிறது நாடோடிகள் 2

nadodigal

2009 ம் ஆண்டு இயக்குநர் சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளிவந்த நாடோடிகள் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று, வசூலிலும் சாதனை படைத்தது. இந்த வெற்றியின் தொடர்ச்சியாக மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ். நந்தகோபால் தயாரிப்பில், சமுத்திரகனி இயக்கத்தில் 'நாடோடிகள் 2' தற்போது உருவாகி வருகிறது. இதில் சசிகுமார் - அஞ்சலி காதாநாயகன், கதாநாயகியாக நடிக்கிறார்கள். மற்றும் பரணி, அதுல்யா, எம். எஸ். பாஸ்கர், நமோ நாராயணன், ஞானசம்பந்தம், துளசி, ஸ்ரீரஞ்சனி, சூப்பர் சுப்புராயன், ராம்தாஸ், கோவிந்த மூர்த்தி ஆகியோர் நடிக்கிறார்கள். ஒரு முக்கிய வேடத்தில் சமுத்திரகனி நடிக்து படத்தை எழுதி இயக்கியுள்ளார். மேலும் விரைவில் இசை இப்படத்தின் வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. படமும் விரைவில் வெளிவர இருக்கிறது.

nadodigal2 samuthrakani
இதையும் படியுங்கள்
Subscribe