irumbu thirai.jpeg

nandita

ஜி.ஆர். மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாராகும் 'நர்மதா' படப்பிடிப்பு நேற்று நாகர்கோயிலில் பூஜையுடன் தொடங்கியது. நந்திதா ஸ்வேதா நாயகியாக நடிக்கும் இப்படத்தில் விஜய் வசந்த், எம்.எஸ். பாஸ்கர், சந்தோஷ் பிரதாப் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். தாய்-மகன் பாசத்தைப்பற்றி பேசும் படமாக உருவாகும் இப்படத்தை அறிமுக இயக்குனர் கீதா ராஜ்புத் இயக்குகிறார்.

Advertisment

style="display:inline-block;"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9546799378">

பாலாவின் 'தாரை தப்பட்டை' படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய இவர் இப்படத்தை பற்றி பேசும்போது...

Advertisment

"எமோஷனல் பேமிலி எண்டர்டெயின்மெண்ட் டிராமா ஜேனரில் உருவாகும் திரைப்படம் இது. தாய்க்கும் மகனுக்கும் உள்ள பாசபிணைப்பை நெகிழ்ச்சியான பயணத்தின் பின்னணியில் உணர்வுபூர்வமாகச் சொல்கிறேன். இதில் கதையின் நாயகியாக நடித்திருக்கும் நந்திதா ஸ்வேதா, ஏழு வயது ஆண் குழந்தைக்கு தாயாக நடிக்கிறார். கதையின் நாயகனாக நடிக்கும் விஜய் வசந்த் இதுவரை திரையில் பார்த்திராத புதிய கேரக்டரில் நடிக்கிறார். இந்த படத்தில் கௌரவ வேடத்தில் நடிக்க முன்னணி நடிகர் ஒருவருடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. நாகர்கோயிலில் இப்படத்திற்காக பிரம்மாண்டமான முறையில் இயற்கை வளத்துடன் கூடிய திறந்த வெளி அரங்கம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. படத்தின் படபிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது" என்றார்.