nadikar sangam take care of mayilsamy childrens

நடிகர் மயில்சாமியின் (57) மறைவு தமிழ் திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ரசிகர்கள் முதல் திரைபிரபலங்கள், அரசியல் தலைவர்கள் வரை பெரும்பாலானோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சங்கத்தலைவர் நாசர் மற்றும் பிரபுஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்திவிட்டு செய்தியாளர்களிடம் பேசினர்.

Advertisment

நடிகர் நாசர் பேசுகையில், "இது ஒரு தாங்கமுடியாது வலி. ரொம்ப பெரிய அதிர்ச்சி. சின்ன வயசு, சுறுசுறுப்பா இருக்கிற மனிதர். யாருக்கும் எந்த வித தீங்கும் நினைக்காத மனிதர். அவருடைய தகுதிக்கு மீறி பல உதவிகளை செய்துள்ளார். என்னுடைய இயக்கத்தில் நடித்துள்ளார். அவருடைய இடத்தை யார் நிரப்புவார் என்று தெரியவில்லை. அவருடைய குழந்தைகளுக்கு சின்ன வயசு. மயில்சாமி ஸ்தானத்தில் இருந்து அவரது குழந்தைகளை அரவணைப்போம்" என்றார்.

Advertisment

இதனிடையே நடிகர் பிரபு தனது அஞ்சலியை நேரில் சென்று செலுத்தி விட்டு பின்பு செய்தியாளர்களிடம் பேசுகையில், "ரொம்ப கஷ்டப்பட்டு திரையுலகத்திற்கு வந்தவர். சிறு வயதிலிருந்தே எனக்கு அவர் பழக்கம். நல்ல உளம் படைத்தவர். அவர் இருந்தால் என்றால் அந்த இடமே கலகலனு இருக்கும். அவருடைய ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்" என்றார்.