Advertisment

சென்னையில் நடிகர் நடிகையர் போராட்டம் 

nadigar sangam

காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினைகளுக்காக பல் வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் தற்போது தென்னிந்திய நடிகர் சங்கமும் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளது. இதற்காக வரும் 8ஆம் தேதி நடிகர்,நடிகைகளின் கண்டன போராட்டம் சென்னையில் நடைபெறும் என்று அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில்.... "திரையுலகினர் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மத்திய அரசினை வலியுறுத்தியும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம், தமிழ் திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து வருகிற 8-ந்தேதி காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரை வள்ளுவர் கோட்டம் அருகில் மாபெரும் கண்டன அறவழி போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். தமிழக விவசாயிகளின் முக்கிய பிரச்சினையாக இருப்பதாலும், தமிழகத்தின் சுற்று சூழலை காக்கின்ற பெரும் பொறுப்பு நம் அனைவருக்கும் இருப்பதினாலும் தயாரிப்பாளர்கள், நடிகர், நடிகைகள், தொழிலாளர்கள், வினியோகஸ்தர்கள் அனைவரும் இந்த கண்டன அறவழி போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளனர்.

Advertisment
nadigarsangam
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe