Skip to main content

தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து கோரிக்கைகள் வைத்த நடிகர் சங்கம் 

Published on 27/07/2018 | Edited on 27/07/2018
nadigar sangam

 

 

 

தெனிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் துணை தலைவர் பொன்வண்ணன் மற்றும் செயற்க்குழு உறுபினர்கள் கோவை சரளா, பசுபதி ஆகியோர்கள் சமீபத்தில் தலைமை செயலகத்தில் மாண்புமிகு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆகியோர்களை நேரில் சந்தித்து நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் அவர்களுக்கு மணி மண்டபம் அமைத்து சிறப்பித்ததோடு அவரது பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாடவும் அரசாணை வெளியிட்டு தமிழ் திரையுலகிற்கு பெருமை சேர்தமைக்கும், அரசு பொருட்காட்சிகளில் அரசின் கொள்கைகளை விளக்கும் நாடக குழுக்களுக்கு வழங்கி வரும் சன்மானதொகை ருபாய் 2௦௦௦-யில் இருந்து ருபாய் 5௦௦௦-ஆக உயர்த்தி அரசாணை பிறப்பித்தமைக்கும் நன்றி தெரிவித்தனர்

 

 

 

மேலும் பொருட்காட்சி நிகழ்ச்சிகளில் தற்போது நாடகக் குழுக்களுக்கு குறைந்தது 10 நபர்கள் நாடகத்திற்கு சென்றால் மட்டுமே அரசுப்பேருந்தில் பயண கட்டண சலுகை வழங்கப்பட்டு வருகிறது. அதை, அதற்கும் குறைவான நபர்கள் நாடகத்திற்கு சென்றாலும் கூட இது பொருந்தும் என்று மாற்றி தாங்கள் அரசாணை வெளியிடவேண்டும். அரசு மூலம் வழங்கும் சன்மானத் தொகையை நாடக கலைஞர்களின் அவரவர் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தவேண்டும். நாடக நடிகர்கள், தெருக்கூத்து கலைஞர்கள் நிகழ்ச்சி நடத்த பேருந்தில் செல்லும்போது அவர்களுடைய இசைக்கருவிகள் எடுத்துச்செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது. எனவே அவர்களுக்கு இசைக்கருவிகள் மற்றும் நிகழ்ச்சிக்கான உடைமைகளை அரசுப்பேருந்தில் எடுத்துச்செல்ல முன்னுரிமை வழங்க வேண்டும். நாடக நடிகர்கள், தெருக்கூத்து கலைஞர்கள் மிகவும் குறைந்த வருமானத்தில் நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றார்கள். எனவே அவர்களுக்கு நிகழ்ச்சி நடத்த செல்லுவதற்கு அரசு பேருந்தில் வருடாந்திர இலவச பயண சலுகை வழங்குமாறும். 60 வயதிற்கு மேல் உள்ள திரைப்பட, நாடக கலைஞர்கள் தொழில் வாய்ப்பு கிடைக்காமல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அவர்களுக்கு மாதந்திர ஓய்வூதிய உதவித்தொகை வழங்கவேண்டும்.
              

தமிழ் திரைப்பட நூற்றாண்டு மற்றும்  புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் நூற்றாண்டு விழா கொண்டாடும் ஆண்டில் நூறாண்டு கடந்த தமிழ் திரைப்பட கலைஞர்களின் வாரிசுகளுக்கு சிறப்பு திட்டமாக மாதந்திர ஓய்வூதிய தொகை  வழங்கிட வேண்டும். ஆகிய கோரிக்கைகளையும் நடிகர் சங்க நிர்வாகிகள் இந்த சந்திப்பின் பொழுது முதல்வரிடம் முன்வைத்தனர், முதல்வர் அவர்களும் கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக தெரிவித்தார், இந்த சந்திபின்போது நடிகர் சங்க பொது மேலாளர் பால முருகன் மற்றும் செய்தி துறை செயலாளர் இரா.வெங்கடேசன் IAS, செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனர் பொ.சங்கர் IAS ஆகியோர் உடனிருந்தனர்.

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாலியல் வன்கொடுமை பின்னணியில் உள்ளவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான தண்டிக்க வேண்டும் - தென்னிந்திய நடிகர் சங்கம்

Published on 14/03/2019 | Edited on 14/03/2019
nadigar sangam

 

பொள்ளாச்சி பாலியல் சம்பவம் குறித்து தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்...  "கடந்த சில நாட்களாக ஊடகங்களிலும், பத்திரிகைகளிலும் வரும் பொள்ளாச்சியில் நடந்துள்ள பாலியல் வன்கொடுமை பற்றிய செய்திகள் மனதை கனக்கச் செய்கின்றன. இந்த மாபெரும் படுபாதக செயல்களை பல காலங்களாக திட்டமிட்டு ஒரு கும்பல் செய்து வந்திருப்பதை ஆதாரப்பூர்வமாக பார்க்க முடிகிறது. இந்த செயலின் பின்னணியில் உள்ளவர்களை விரைவாக கண்டறிந்து, அவர்கள் சமூகத்தில் எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தாலும் கடுமையான தண்டனையை பெற்றுத் தர வேண்டும் என காவல்துறையிடம் வேண்டுகோள் வைக்கிறோம். இச்செயலில் காவல்துறை நேர்மையாகவும் துணிவுடனும் விரைந்து செயல்படும் என நம்புகிறோம்.

 

 

 அந்த நேர்மைக்கு எப்போதும் தென்னிந்திய நடிகர் சங்கம் துணை நிற்கும் என இந்த நேரத்தில் உறுதியளிக்கிறோம். அலைபேசியில் உள்ள இணையதளங்கள், முகநூல், வாட்ஸ்அப், போன்ற விஞ்ஞான வளர்ச்சியில் உள்ள ஆபத்துக்களை உணர்ந்து இன்றைய தலைமுறையினர் விழிப்புடன் செயல்படவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். நம்மை வழி நடத்துவதில் நம்ம பெற்றோருக்கு இருக்கக்கூடிய பொறுப்பும், கனவுகளும், வேறு யாருக்கும் இருக்கப்போவதில்லை ...! அதனால் ஒரு குறிப்பிட்ட வயது வரை நம் பெற்றோர்களுக்கு தெரியாமல் எந்த ஒரு உறவுகளையும் நட்புகளையும் யாரும் வைத்துக்கொள்ள வேண்டாம் என இளைய தலைமுறையினரை தென்னிந்திய நடிகர் சங்கம் கேட்டுக் கொள்கிறது" என்று குறிப்பிட்டுள்ளது.

 

Next Story

'புகைப்படத்துடன் விஷாலின் மணமகள் என்று வெளிவந்த தகவல் தவறு..' - விஷால் அதிரடி அறிவிப்பு !

Published on 12/01/2019 | Edited on 12/01/2019
vishal

 

விஷாலுக்கும் ஆந்திராவை சேர்ந்த அனிஷா என்ற பெண்ணுக்கும் காதல் மலர்ந்துள்ளதாகவும், அனிஷா ஐதராபாத்தை சேர்ந்த தொழில் அதிபர் விஜய் ரெட்டி-பத்மஜா தம்பதியின் மகள் ஆவார் என்றும் சமீபத்தில் செய்திகள் பரவின. மேலும் அவரது புகைப்படமும் சமூகவலைத்தளங்களில் வெளியாகி இவர்கள் திருமணம் விரைவில் நடக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இது குறித்து விஷால் தரப்பில் விளக்கமளித்து அறிக்கை ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில்...

 

 

"நடிகர் விஷாலின் திருமணம் பற்றி இந்த படத்திலிருக்கும் பெண்மணியின் புகைப்படத்துடன் விஷாலின் மணமகள் என்று வெளிவந்து பரவி கொண்டிருக்கும் செய்தி முற்றிலும் தவறானதும் உண்மைக்கு புறம்பானதுமாகும். முறைப்படி அறிவிப்பு விரைவில் வெளியாகும். மேலும் திருமணம் பற்றி அதிகார பூர்வமான அறிவிப்பு அளிக்கப்பட்ட பின் செய்திகளை வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்" என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.