பழம்பெரும் நடிகரும், ‘என்னடி முனியம்மா கண்ணுல மைய்யி...’பாடலின் மூலம் புகழ்பெற்ற பாடகருமான டி.கே.எஸ் நடராஜன் (வயது 87) இன்று (05.05.2021) காலை 6.30 மணிக்கு இயற்கை எய்தினார். அவரது மறைவுக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துவரும் நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கம் மறைந்த டி.கே.எஸ் நடராஜனுக்கு இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில்...
"பழம்பெரும் நடிகரும், நாட்டுப்புற பாடகரும், ‘என்னடி முனியம்மா கண்ணுல மைய்யி...’பாடலின் மூலம் புகழ்பெற்ற பாடகருமான டி.கே.எஸ். நடராஜன் (வயது 87) இன்று காலைஇயற்கை எய்தினார். ‘இரத்த பாசம்’, ‘கவலை இல்லாத மனிதன்’, ‘தேன்கிண்ணம்’, ‘நேற்று இன்று நாளை’, ‘நான் ஏன் பிறந்தேன்’, ‘குரு’, ‘தீ’, ‘வருஷம் 16’, ‘வாத்தியார்’ உட்பட சுமார் 500க்கும் மேற்பட்ட ஹிட் படங்களில் நடித்துபிரபலமானார். அன்னாரது மறைவுக்கு அனைத்து நடிகர், நடிகைகள் சமூகம் சார்பாக தென்னிந்திய நடிகர் சங்கம் ஆழ்ந்த இரங்கலையும்அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்துக்கு ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறது" என குறிப்பிடப்பட்டுள்ளது.