Skip to main content

ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூட வேண்டும்.... நடிகர் சங்கம் கண்டனம் 

Published on 23/05/2018 | Edited on 24/05/2018

 

nadigar sangam

 

 


தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக கடந்த மாதம் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக அறவழிப்போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டை கண்டித்து நடிகர் சங்கம் சார்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில்.... "தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்தை மூட கூறி 100 நாட்களாக அமைதி போராட்டம் நடத்திய மக்கள் மீது நேற்று போலீஸார்  துப்பாக்கி சூடு நடத்தியது வன்மையாக கண்டிக்கதக்கது.  10 பேர் உயிரிழந்து, பலரும் காயம்பட்டிருப்பது மனிதாபிமானமற்ற செயலாக இருக்கிறது. இந்த துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் வருத்தத்தையும், ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறது. மேலும் மத்திய மாநில அரசுகள் இந்த பிரச்சனைக்கு உடனடியாக தீர்வுகாண தென்னிந்திய நடிகர் சங்கம் வேண்டுகோள் வைக்கிறது. கடந்த மாதம் வள்ளூவர் கோட்டத்தில் சினிமா துறையின் சார்பில்  நடைப்பெற்ற அறவழிப்போராட்டத்தில் ஸ்டார்லெட் ஆலை மூட வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றி சினிமா துறையை சேர்ந்த 5 ஆயிரம் தொழிலளர்களிடம் கையெப்பம் பெற்று ஆளுநரிடம் மனு கொடுத்தோம். மக்கள் போராட்டம் வலுவடைந்திருக்கிற நிலையில் இனியும் தாமதிக்காமல் ஸ்டார்லைட் ஆலையை உடனடியாக மூடவேண்டும் என தென்னிந்திய நடிகர் சங்கம் வலியுறுத்துகிறது" என குறிப்பிட்டுள்ளனர்.                                                                                                                                                                                                                                                                                                                 

சார்ந்த செய்திகள்