Advertisment

தனுஷ் விவகாரம் - நடிகர் சங்கம் மீண்டும் கண்டனம்

nadigar sangam condemn about dhanush issue regards fefsi statement

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைமையில் ஃபெப்சி உள்ளிட்ட சங்கங்கள் பல்வேறு இணைந்து, கடந்த ஜூலையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தி பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றினர். அதில் ஒன்றான தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி மற்றும் ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் கதிரேசன் தயாரிப்பாளர்களிடையே தனுஷ் வாங்கிய முன்பணம் குறித்து ஆலோசித்து இனி அவரை வைத்து தயாரிப்பவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டுமென்றால் கலந்தாலோசிக்க வேண்டுமென முடிவெடுத்தனர். இதற்கு கண்டனம் தெரிவித்த நடிகர் சங்கம், தனுஷ் விவகாரத்தில் தலையிட்டு அதற்கு தீர்வை தயாரிப்பாளர்கள் சங்கத்திடம் கூறியுள்ளது. இதையடுத்து கடந்த 9ஆம் தேதி தயாரிப்பாளர்கள் தலைமையில் ஃபெப்சி உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் இணைந்து ஆலோசித்து தனுஷ் படத்திற்கு ஒத்துழைப்பு தர அனுமதி வழங்கினர். அதைத் தொடர்ந்து தனுஷ் தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.

Advertisment

இந்த விவகாரங்களுக்கு இடையே தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம், ஆகஸ்ட் 16ஆம் தேதிக்கு மேல் புது படப்பிடிப்பு நடத்த கூடாது என்றும் அதற்கு முன்னதாக ஆரம்பிக்கப்பட்ட படப்பிடிப்புகள் நவம்பர் 1ஆம் தேதிக்கும் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்திருந்த நிலையில், தனுஷ் படப்பிடிப்பு நடத்தி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இது தொடர்பாக ஃபெப்சி சங்க தலைவர் ஆர்.கே.செல்வமணி, “இயக்குநர் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம், விநியோகஸ்தர்கள் சங்கம் உள்ளிட்ட சங்கங்கள் ஒன்றிணைந்த கூட்ட குழு ஆரம்பித்து மீண்டும் கலந்தாலோசிக்க வேண்டும்” என பேசியிருந்தார்.

Advertisment

இந்த நிலையில் ஆர்.கே.செல்வமணியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து நடிகர் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “தனுஷ் விவகாரத்தில் நடிகர் சங்கம் முன்னெடுத்த முயற்சியால் தீர்வு ஏற்பட்டு, தற்போது அவரின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதனிடையே நேற்று (17.09.2026) திடீரென இந்த விவகாரத்தை விசாரிக்க ஒரு கூட்டுக் குழு அமைக்க வளியறுத்தியுள்ளதாக ஃபெப்சி நிர்வாகம் பத்திரிக்கை செய்திகள் வெளியிட்டுள்ளது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. தயாரிப்பாளர்கள் நடிகர்கள் இடையிலான சிக்கல்களை அந்த இரு அமைப்புகளும் சுமூகமாக கையாண்டு வரும்போது, எந்த முகாந்திரமும் இன்றி ஃபெப்சி நிர்வாகம் வளிய தவையிட்டு, இல்லாத ஒரு கருத்தை தெரிவித்து இருப்பது பெரும் கண்டனத்திற்குரியது. ஃபெப்சி நிர்வாகமே முன்னின்று திரைத்துறை சிக்கல்கள் அனைத்திற்கும் தீர்வு காண்பது போன்ற ஒரு மாய தோற்றத்தை ஏற்படுத்த முயலும் இந்த செயலுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் அழுத்தமான கண்டனம் தெரிவிக்கிறது. ஏனெனில், நடிகர்கள் தயாரிப்பாளர்கள் இடையே சிக்கல் எழுத்தால். அதை பரஸ்பரம் பேசித் தீர்வு காணும் அனுபவமும் ஆற்றலும் உள்ளவர்கள் இரு அமைப்புகளிலும் உள்ளனர் என்பதை உறுதிபட நினைவுபடுத்துகிறோம். மேலும், ஃபெப்சி தொழிலாளிகள் உட்பட அனைவர் நலனையும் கருத்தில் கொண்டே இதுநாள் வரை தென்னித்திய நடிகர் சங்கம் செயலாற்றி வருகிறது என்பதையும் குறிப்பிட விரும்புகிறோம்.

அதற்கு உதாரணமாக தமிழ்த் திரையுலகின் தொழிலாளிகளுக்கு மிகக் கடுமையான இன்னல்கள் ஏற்படும் எல்லா குழல்களிலும், அனைவருக்கும் முன்பாக தென்னித்திய நடிகர் சங்கமே ஃபெப்சி தொழிலாளர்களுக்குமான நலத்திட்டங்களையும் முன்னெடுத்து, ஆதரவுக்கரம் நீட்டியுள்ளது என்பதை, கொரோனா உள்ளிட்ட காலங்களில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உறுப்பினர்கள் செய்த அளப்பரிய உதவிகள் பறைசாற்றும் அதை கபெப்சி நிர்வாகமும் மறுக்க முடியாது என்பதையும் சுட்டிக் காட்டுகிறோம். உழைக்கும் தொழிலாளிகளை பின்புலமாக நிறுத்தி, ஃபெப்சி நிர்வாகம் தங்களை அதிகார மையமாக சித்தரித்துக் கொண்டு, பிற சங்கங்களின் அலுவல்களில் தலையிடுவதை தவிர்த்து, அந்த கவனத்தை தங்கள் அமைப்பை சார்ந்தவர்கள் நலனில் செலுத்துவது அனைவருக்கும் நன்மை பயக்கும் என்பதை திரைத் தொழிலாளர்கள் மீது உள்ள உண்மையான அக்கறையால் அறிவுறுத்துகிறோம். அத்துடன், திரைத்துறையில் பலகாலமாக நிலவும் பொது அமைதியையும் நல்லிணக்கத்தையும் குலைக்க முற்படும் நிர்வாகத்தின் இத்தகைய வரம்பு கடந்த செயல்பாடுகளையும் வீண் சர்ச்சை ஏற்படுத்தும் அறிக்கைகளையும், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கமும் கண்டிக்க வேண்டுமென தென்னிந்திய நடிகர் சங்கம் வலியுறுத்துகிறது” என்று குறிப்பிட்டுள்ளது.

FEFSI actor dhanush
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe