Advertisment

நடிகர்களுக்கு புதிய கட்டுப்பாடு... நடிகர் சங்கம் அதிரடி 

vishal

தென்னிந்திய நடிகர் சார்பில் நடிகர், நடிகைகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதித்து தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில்... "வணக்கம், கடந்த காலங்களில் திரை உலகில் திரைப்பட விழாக்கள், விருது வழங்கும் நிகழ்ச்சிகள், நடன நிகழ்ச்சிகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என பல நிகழ்வுகளும் நடந்துள்ளது. அந்த நிகழ்ச்சிகளில் நடிகர் நடிகைகள் பலரும் கலந்து கொண்டுள்ளனர். அனால், சமீப காலங்களில் அது வியாபார நோக்கத்தில் நடத்தபடுவதால் அந்த பயனை நடிகர் நடிகைகளும் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் நடிகர் சங்க சிறப்பு கூட்டத்தில் இது பற்றி விவாதித்து முடிவெடுக்கப்பட்டது . அன்று எடுத்த முடிவில் இனிமேல் இது போன்ற விழாக்களில் கலந்து கொள்ளும் நடிகர்கள் பொருளாதாரமாக பயன்படும் வகையிலோ, அல்லது தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம் ஆகியவற்றுக்கு நன்கொடையாக தருபவர்கள் நிகழ்வில் மட்டும் கலந்து கொள்வதென முடிவு செய்யப்பட்டது.

Advertisment

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

Advertisment

இதற்கு பின் நடந்த விழாக்களான கலர்ஸ் டிவி, விஜய் டிவி, கலாட்டா டாட் காம் விருது விழாக்களில் இந்த நடைமுறையில் பணம் பெறப்பெற்று அறக்கட்டளையின் செயல்பாட்டுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக ஹைதராபாதில் பிலிம் பேர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இந்த நடைமுறையை அந்த விழா நடத்துபவர்களிடம் எடுத்து கூறியும் இன்றுவரை ஒத்துழைப்பு தராததினால், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் நடிகர் நடிகைகளிடம் வேண்டுகோள் வைத்தோம். எங்கள் வேண்டுகோளை ஏற்று கொண்டு அந்த விருது விழாவினை தவிர்த்த செல்வி. நயன்தாரா, திருமதி குஷ்புசுந்தர், திரு விஜய்சேதுபதி, திரு கார்த்தி மற்றும் அனைவருக்கும் தென்னிந்திய நடிகர் சங்கம் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறது. மேலும் தங்களின் ஒத்துழைப்பால் பல ஏழை கலைஞர்களின் குடும்பங்களுக்கு உதவமுடியும் . இனி வரும் காலங்களில் மற்ற திரை கலைஞர்களும் பின்பற்றுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம்" கூறியுள்ளது.

vishal nadigarsangam
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe