Advertisment

“ஒரு காரணமில்லை, பல காரணங்கள் உள்ளது”- நவாசுதிக்-ஆலியா விவாகரத்து!

nawassudin

பாலிவுட்டின் பெருமை என்கிற அளவிற்குத் தன்னுடைய நடிப்பால்பலரையும் கவர்ந்தவர் நடிகர் நவாசுதின் சித்திக்கி. தற்போது இவருடைய மனைவி விவாகரத்து நோட்டீஸ் கொடுத்திருப்பது திரையுலகில் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Advertisment

சுயாதீன படங்களில் நடிப்பதன் மூலம் திரையுலகில் அறிமுகமாகி தற்போது சர்வதேச நடிகராக வலம் வருபவர் நவாசுதின் சித்திக். 'கேங்க்ஸ் ஆஃப் வசிப்பூர்', 'பிளாக் டே', 'லன்ச் பாக்ஸ்' போன்ற பல படங்களில் இவருடைய நடிப்பு தனித்துவமாகவும் ரசிக்கும்படியாகவும் இருந்தது. இவர் நடித்த 'சேக்ரட் ஆஃப் கேம்ஸ்' என்னும் வெப் தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரிதாகப்பாராட்டைப் பெற்றது.

Advertisment

இந்நிலையில் நவாசுதின் சித்திக்கின் மனைவி ஆலியா சித்திக், அவருக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதுகுறித்த காரணம் எதுவும் கூறப்படாத நிலையில், இந்த டைவர்ஸ் நோட்டீஸுக்கு நவாசுதின் தரப்பில் இருந்து பதிலும் இல்லை என்று சொல்லப்படுகிறது. ஹிந்தி பத்திரிகை நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள ஆலியா, அவரை பிரிய ஒரு காரணம் மட்டுமில்லை, பல காரணங்கள் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 15 நாட்களுக்குள் அவர்தரப்பிலிருந்து பதில் வராவிட்டால் சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்க இருப்பதாகத்தெரிவித்துள்ளார்.

nawazuddin siddique
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe