'மயக்கம் என்ன' படத்திற்குபிறகு கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் கழித்து தனுஷ் - செல்வராகவன் கூட்டணியில் வெளியாகியுள்ள படம் 'நானே வருவேன்'. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்றுவெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் தாணு, இயக்குநர்செல்வராகவனை நேரில் சந்தித்து படத்தின் வெற்றிக்காக மாலை அணிவித்து பாராட்டுகளை தெரிவித்துள்ளார். அத்ததுடன் நானே வருவேன் படம் முதல் நாள் ரூ.10.1 கோடி வசூல் செய்துள்ளதாகபடக்குழு தரப்பில் இருந்துதெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்தடுத்து விடுமுறை நாட்கள் வரவுள்ளதால் படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் என்றும் தயாரிப்பாளர் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.