naane varuven team released special poster for dhanush birthday

தனுஷ் தற்போது வெங்கி அட்லூரி இயக்கத்தில் 'வாத்தி' படத்திலும் அருண் மாதேஸ்வரன் இயக்கும் 'கேப்டன் மில்லர்' படத்திலும் நடித்து வருகிறார். இதனிடையே செல்வராகவன் இயக்கத்தில் 'நானே வருவேன்' படத்தில் நடித்துமுடித்துள்ளார். கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கும் இப்படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தில் செல்வராகவன் இயக்குவது மட்டுமல்லாமல், நடித்தும் உள்ளார். மேலும் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் ஸ்வீடன் நாட்டு நடிகை எல்லி அவ்ரம் மற்றும் இந்துஜா ஆகியோர் நடித்துள்ளனர்.

Advertisment

இந்நிலையில் தனுஷ் நாளை (28.07.2022) தனது 40-வது பிறந்தநாளில் அடியெடுத்து வைக்கிறார். இதனையொட்டி தனுஷிற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் 'நானே வருவேன்' படக்குழுவினர் தற்போது தனுஷிற்கு வாழ்த்து தெரிவித்து புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அதோடு படத்தின் இறுதி கட்ட பணிகள் நடைபெற்றுவருவதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.இதனிடையே தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு 'வாத்தி' படக்குழு வெளியிட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பலரது கவனத்தை பெற்று வரும் நிலையில் 'வாத்தி' படத்தின் டீசர் நாளை வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisment