/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/dc008362-63ac-415b-a381-842e3ee1dedb.jpg)
தனுஷ் - செல்வராகவன் கூட்டணியில் உருவான ‘துள்ளுவதோ இளமை’, ‘காதல் கொண்டேன்’, ‘புதுப்பேட்டை’, ‘மயக்கம் என்ன’ ஆகிய படங்கள் மாபெரும் வெற்றிபெற்றன. இதையடுத்து இவர்கள் கூட்டணி படத்துக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உருவானது. இந்நிலையில், செல்வராகவன் அடுத்ததாக இயக்கவுள்ள படத்தில் மீண்டும் தனுஷ் நாயகனாக நடிக்கவுள்ளார். கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் செல்வராகவனின் 12வது படமாக உருவாகும் இப்படத்திற்கு 'நானே வருவேன்' என பெயரிடப்பட்டுள்ளது.
ஆக்ஷன் த்ரில்லர் ஜானரில் உருவாகும் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக இரண்டு கதாநாயகிகள் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. அதில் ஒரு கதாநாயகியாக நடிகை தமன்னா நடிக்கவுள்ளதாகவும் சமீபத்தில் தகவல் வெளியானது. இப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், இப்படத்தின் ஷூட்டிங் வரும் ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி தொடங்கவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)