/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/1834.jpg)
வெங்கி அட்லூரி இயக்கும் 'வாத்தி' படத்தில் நடித்துள்ள தனுஷ் அடுத்ததாக அருண் மாதேஸ்வரன் இயக்கும் 'கேப்டன் மில்லர்' படத்தில் நடிக்கவுள்ளார். இதனிடையே செல்வராகவன் இயக்கும் 'நானே வருவேன்' படத்தில் நடித்துமுடித்துள்ளார். கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இப்படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தில் செல்வராகவன் இயக்குவது மட்டுமல்லாமல், நடித்தும் உள்ளார். மேலும் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் ஸ்வீடன் நாட்டு நடிகை எல்லி அவ்ரம் மற்றும் இந்துஜா ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் படக்குழு இறுதிக்கட்ட பணியில்தீவிரம் காட்டி வருகிறது.இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலர்குறித்ததகவல் வெளியாகியுள்ளது. அதன்படி நானே வருவேன் படத்தின் ட்ரைலர்வரும் 11 ஆம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது. மேலும் படத்தை வரும் 29 ஆம் தேதி வெளியீடவும் படக்குழு திட்டமிட்டுள்ளதாகசினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆனால் செப்டம்பர் 30 ஆம் தேதி பிரமாண்டமாகதயாராகியுள்ள பொன்னியின் செல்வன் படம் வெளியாகவுள்ளதால்இந்த படத்தின் ரிலீஸ் அடுத்த மாதத்திற்கு தள்ளிப்போகவும்வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)